வீடு / சமையல் குறிப்பு / அரைக் கீரை கடைசல்

Photo of Amaranthus leaf kadaisal by saranya sathish at BetterButter
361
2
0.0(0)
0

அரைக் கீரை கடைசல்

Jun-26-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரைக் கீரை கடைசல் செய்முறை பற்றி

அரைக் கீரை கடைசல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரைக்கீரை - 1 கட்டு
  2. பூண்டு - 5 பல்
  3. பச்சைமிளகாய் - 2
  4. நறுக்கிய சின்ன வெங்காயம் - 4
  5. தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
  6. கடுகு - 1 டீஸ்பூன்
  7. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கீரை கட்டிலிருந்து இலைகளை மட்டும் தனியாக எடுத்து நன்றாக தண்ணீர் விட்டு அலசி கொள்ளவும்.
  2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூண்டு பச்சைமிளகாய் கழுவிய கீரையை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
  3. பின்னர் தண்ணீரை வடிகட்டி கீரை பச்சை மிளகாய் பூண்டு ஒரு பிளேட்டில் மாற்றவும்.
  4. மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
  5. எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்துத் தாளிக்கவும்.
  6. பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. இப்பொழுது வேக வைத்த பூண்டு பச்சை மிளகாய் கீரை கலவையை சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் வதக்கவும்.
  8. பின்னர் அடுப்பை அணைத்து உப்பு சேர்த்துக் கலந்து நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் பால் சேர்த்து அரைத்து எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்