வீடு / சமையல் குறிப்பு / கும்பகோணம் கடப்பா (இட்லிக்கும் தோசைக்கும் துணை உணவு)

Photo of Kumbakonam Kadappa (Side dish for Idli & dosa) by Subashini Murali at BetterButter
2229
34
4.7(0)
0

கும்பகோணம் கடப்பா (இட்லிக்கும் தோசைக்கும் துணை உணவு)

May-21-2016
Subashini Murali
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 கப் பாசிப் பயிர்
  2. 2 உருளைக்கிழங்கு
  3. 2 வெங்காயம் நறுக்கப்பட்டது
  4. பூண்டு பற்கள் - 3 நசுக்கப்பட்டது
  5. உப்பு - சுவைக்கேற்ற அளவு
  6. தேவையான அளவு தண்ணீர்
  7. 1 தக்காளி நறுக்கப்பட்டது (விருப்பம் சார்ந்தது)
  8. அரைப்பதற்கு
  9. துருவப்பட்டத் தேங்காய் 4 தேக்கரண்டி
  10. இஞ்சி சிறியத் துண்டு
  11. இலவங்கப்பட்டை சிறியத் துண்டு
  12. 2 கிராம்பு
  13. கசகசா 1 தேக்கரண்டி
  14. 4_6 பச்சை மிளகாய்
  15. 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  16. தாளிப்புக்கு
  17. 1_2 தேக்கரண்டி எண்ணெய்
  18. 1 தேக்கரண்டி கடுகு
  19. 1 பே இலை
  20. 1 கொத்து கறிவேப்பிலை
  21. அலங்காரத்திற்காக நறுக்கப்பட்ட கொத்துமல்லி

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பையும் உருளைக்கிழங்கையும் பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
  2. உருளைக்கிழங்கையும் பருப்பையும் மசித்து, மீதமுள்ள உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. அரைப்பதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் சேர்த்து கடாயைச் சூடுபடுத்தி, தாளிப்புக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைத் தாளித்துக்கொள்ளவும்.
  4. வெங்காயத்தையும் நசுக்கிய பூண்டையும் சேர்த்து, வெங்காயம் வெளுக்கும்வரை வதக்கவும். ( நீங்கள் தக்காளி சேர்க்க விரும்பினால் கூழாகும்வரை வதக்கவும்.)
  5. இப்போது ஒரு கப் தண்ணீரையும் உப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது பருப்பையும் உருளைக்கிழங்கையும் அரைத்த மசாலாக்களையும் சேர்த்து சிம்மில் 5-6 நிமிடங்கள் வைக்கவும் (மசாலாவின் பச்சை வாடை போகும் வரை) இடையிடையே கலக்கவும். இல்லையேல் அடிப்பிடித்துவிடும்.
  6. பதத்தைச் சோதித்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.
  7. கொத்துமல்லியால் அலங்கரித்து பஞ்சுபோன்ற இட்லி அல்லது மொறுமொறுப்பான தோசைகளோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்