வீடு / சமையல் குறிப்பு / தக்காளி ரவா பாத்

Photo of Tomatto Rava Bath by Deepa Srivatsan at BetterButter
221
1
0.0(0)
0

தக்காளி ரவா பாத்

Jun-26-2018
Deepa Srivatsan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி ரவா பாத் செய்முறை பற்றி

எளிதாக செய்யக்கூடியது வித்தியாசமான சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாம்பே ரவை இரண்டரை கப்
  2. பெரிய வெங்காயம் 2 அல்லது 3
  3. பச்சைப் பட்டாணி ஒரு கைப்பிடி அளவு
  4. பெங்களூர் தக்காளி பெரியது 3 (தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்)
  5. பச்சை மிளகாய் 4
  6. கறிவேப்பிலை சிறிதளவு
  7. கடுகு ஒரு ஸ்பூன்
  8. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  9. உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  10. கொத்தமல்லி சிறிதளவு
  11. இஞ்சி பொடியாக நறுக்கியது அரை ஸ்பூன்
  12. பெருங்காயம் சிறிதளவு
  13. உப்பு தேவையான அளவு
  14. எண்ணெய் தேவையான அளவு
  15. தண்ணீர் 4 கப்
  16. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெறும் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ரவையை சிறிது நேரம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  3. பின் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பச்சை மிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும்
  4. அதன் பின் வெங்காயம் பட்டாணி, இஞ்சி முதலியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்
  5. நான்கு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் தேவையான அளவு உப்பு,பெருங்காயம் சேர்க்கவும்
  6. அதன் பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
  7. பின்பு ரவையை அதில் போட்டு நன்றாக வெந்ததும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அடுப்பை கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்