சில்லி பரோட்டா | Chilli Parotta in Tamil

எழுதியவர் Subashini Murali  |  21st May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chilli Parotta by Subashini Murali at BetterButter
சில்லி பரோட்டாSubashini Murali
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

179

0

சில்லி பரோட்டா

சில்லி பரோட்டா தேவையான பொருட்கள் ( Ingredients to make Chilli Parotta in Tamil )

 • 4 உடனடி சிலோன் பரோட்டா
 • பொறிப்பதற்கு எண்ணெய்
 • 2 வெங்காயம் மெலிதாக நறுக்கப்பட்டது
 • 1 தக்காளி பொடியாக நறுக்கப்பட்டது
 • 1/2 கப் பாசிப் பயிர் நறுக்கப்பட்டது
 • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
 • 2 தேக்கரண்டி தக்காளி சாஸ்
 • 1 தேக்கரண்டி சோயா சாஸ்
 • 1 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்த்தூள்
 • 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
 • நறுக்கப்பட்ட கொத்துமல்லியும் ஸ்பிரிங் ஆனியனும்

சில்லி பரோட்டா செய்வது எப்படி | How to make Chilli Parotta in Tamil

 1. பரோட்டாக்களைச் சிறு துண்டுகளாக நறுக்கி சூடான எண்ணெயில் பொறித்து எடுத்து வைக்கவும்.
 2. ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
 3. மெலிதாக நறுக்கப்பட்ட வெங்காயத்தைப் போட்டு 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும். இப்போது இஞ்சிப் பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
 4. நறுக்கப்பட்ட தக்காளியைச் சேர்த்து கூழாகும்வரை வேகவைக்கவும்..
 5. மிளகாய்த்தூள், உப்பு, மல்லித்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக்க் கலக்கவும்.
 6. இப்போது நறுக்கப்பட்ட குடமிளகாயைச் சேர்த்து சும்மா சுண்டிவிடவும்.
 7. இப்போது தக்காளி சாஸ், சோயா சாஸ், கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். வறுத்து பரோட்டா துண்டுகளைச் சேர்த்து பரோட்டாவுடன் மசாலா தூள் பூசப்படும் வரை கிண்டவும்.
 8. அடுப்பை அணைத்துவிட்டு கொத்துமல்லி ஸ்பிரிங் ஆனியனோடு அலங்கரிக்கவும். ஆனியன் ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Chilli Parotta in tamil (0)