Photo of Chocolate halwa by Mughal Kitchen at BetterButter
897
3
0.0(1)
0

Chocolate halwa

Jun-26-2018
Mughal Kitchen
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கோதுமை ரவை 250 கிராம்
  2. நெய் 100 கிராம்
  3. தேங்காய் எண்ணெய் 100கிராம்
  4. கோக்கோ பவுடர் 50 கிராம்
  5. கருப்பட்டி 400 கிராம்
  6. ஏலக்காய்தூள் ஒருடீஸ்பூன்
  7. கான்ப்ளார் மாவு 3மேஜைக்கரண்டி
  8. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. கோதுமைரவையை இரண்டுமணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
  2. அரைத்த கோதுமையை வடிகட்டி கொள்ளவும்
  3. தண்ணீர் ஊற்றி பால்பிழிந்து கொள்ளவும்
  4. கோதுமை பாலை நான்கு மணிநேரம் புளிக்க வைக்கவும்
  5. பின் பாலின்மேலே உள்ள தண்ணீரை சாய்த்து எடுத்து விடவும்
  6. வடித்த தண்ணீரை போல் அதே அளவு தண்ணீர் சேர்க்கவும்.பின் அடுப்பில் அடிகானமான வானலியில் கோதுமை பாலைஊற்றி கிளறவும்
  7. கட்டி விழுகாமல் கிளறி விட வேண்டும்.கருப்பட்டியை சிறிது நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி வைக்கவும்.கார்ன் மாவைகரைக்து வைக்கவும்.கோதுமைபால் கட்டியான பின் கருப்பட்டி பால் சேர்க்கவும்சிறிது உப்பு சேர்க்கவும்
  8. பின் கார்ன் கரைசல் சேர்க்கவும்பின் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.பின் கோக்கோ பவுடர் சேர்க்கவும்.பின் நெய் எண்ணெய்யை சிறிதுசிறிதாக ஊற்றி கிளறி கொண்டே இருக்கவும்
  9. சிறிது முந்திரி சேர்க்கவும்
  10. குறைந்த தீயில் வைத்து நெய் சேர்த்து வானலியில் ஓட்டாத பதம் வரும் வரை கிளறவும்
  11. வானலியில் ஒரக்களில் நெய் தெரிந்தால் அல்வா தயார் .சுவையான சாக்லேட் அல்வா ரெடி.அல்வா மேலே முந்திரி சேர்க்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Karuna Pooja
Jun-27-2018
Karuna Pooja   Jun-27-2018

Wow.....

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்