வீடு / சமையல் குறிப்பு / மட்டன் ரோகன் ஜோஷ்

Photo of Mutton Roghan Josh by Munsila Fathima at BetterButter
235
4
0.0(0)
0

மட்டன் ரோகன் ஜோஷ்

Jun-26-2018
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் ரோகன் ஜோஷ் செய்முறை பற்றி

இது ஒரு காஷ்மீரி உணவாகும். பட்டை ,கிராம்பு, ஏலம்,ஜாதிபதிரி(mace),அனசிப்பு போன்ற பல மசாலாக்களை கொண்டு செய்யக்கூடியது. இதில் வெங்காயம், தக்காளி உபோயாகிக்க மாட்டார்கள். வாசனைக்காக கோழிப்பு உபாயோகிப்பார்கள்.அதற்கு பதில் குங்குமப்பூ உபாயோகிக்கலாம். இஞ்சி தூள்க்கு பதில் நான் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துள்ளேன். இதை சட்டியிலேயே வேக வைப்பார்கள். நான் நேரத்தை குறைக்க குக்கரில் வைத்து சட்டியில் செய்துளேன்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஜம்மு காஷ்மீர்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் அரை கிலோ
  2. அதனோடு வேகவைக்க
  3. எண்ணெய் 4 மேசைக்கரண்டி அளவு
  4. ஜாதிபத்திரி ஒன்று
  5. பட்டை சிறிய துண்டு 2
  6. கிராம்பு-2
  7. கருப்பு ஏலக்காய் 3
  8. ஏலக்காய்-2
  9. இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி
  10. தயிர் 2 தேக்கரண்டி
  11. குங்குமப்பூ 3
  12. காஷ்மீரி மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
  13. உப்பு தேவைக்கு
  14. சட்டியில் வேக வைக்க தேவைப்படும் மசாலா
  15. பிரியாணி இலை இரண்டு
  16. காஷ்மீரி மிளகாய் தூள் இரண்டு தேக்கரண்டி
  17. பட்டை இரண்டு சிறிய துண்டு
  18. கிராம்பு-2
  19. ஏலக்காய்-2
  20. சீரகம் 2 தேக்கரண்டி
  21. சோம்பு 1/8 தேக்கரண்டி
  22. அனசிப்பூ 1
  23. மராத்தி மொக்கு 2
  24. எண்ணெய் ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடித்துக் கொள்ளுங்கள்
  2. பின்பு குக்கரில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் ஜாதிபத்திரி சேர்த்து சிறிது வதக்கவும்
  3. மட்டனை அதில் சேர்த்து சிறிது நேரம் திருப்பி போட்டு பொறித்து கொள்ளுங்கள்.
  4. பின்பு அதனுடன் தயிர் இஞ்சி பூண்டு விழுது, உப்பு ,காஷ்மீரி மிளகாய்த்தூள்,குங்குமப்பூ சேர்க்கவும்
  5. தேவையான தண்ணீர் ஊற்றி முக்கால் வேக்காடு வேக வைத்துக் கொள்ளுங்கள்
  6. இரண்டாவது முறை சொல்லப்பட்ட பட்டை ,கிராம்பு ,ஏலக்காய், சீரகம் ,அனசிப்பூ , மராத்தி மொக்கு எல்லாவற்றையும் சேர்த்து சற்று வறுத்து எடுத்து திரித்து வைத்துக் கொள்ளுங்கள்
  7. மற்றொரு வாணலியில் அல்லது நான்ஸ்டிக் பேனில் ஒரு தேக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை சேர்க்கவும்.
  8. அதோடு வெந்த மட்டன் கலவையை சேர்க்கவும்
  9. அதனோடு திரித்து வைத்த மசாலா மற்றும் காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து சிம்மில் வைத்து முழுமையாக வேகும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
  10. சுவையான மட்டன் ரோகன் ஜோஷ் தயார்
  11. இதனை சாதம், இடியாப்பம் ,ரொட்டி நான் ,போன்றவற்றிற்கு வைத்து சைட் டிஷ்ஆக வைத்து சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்