வீடு / சமையல் குறிப்பு / முருங்கை கீரை வடை

Photo of Drumstick leaves vadai by Fathima Beevi at BetterButter
388
2
0.0(0)
0

முருங்கை கீரை வடை

Jun-27-2018
Fathima Beevi
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முருங்கை கீரை வடை செய்முறை பற்றி

முருங்கை கீரை வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முருங்கை இலை - 1 கப்
  2. கடலைப்பருப்பு - 1/2 கப்  - 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  3. பெருஞ்சீரகம் - 1/2 தே. கரண்டி
  4. கருவேப்பில்லை - 1/4 கப்
  5. வெங்காயம் - 1 - நன்றாக நறுக்கி கொள்ளவும்
  6. கொத்தமல்லி இலை - சிறிதளவு
  7. ச்சை மிளகாய் - 1 - நன்றாக நறுக்கி கொள்ளவும்
  8. உப்பு - தேவைக்கு
  9. மஞ்சள் தூள் - 1/4 தே. கரண்டி
  10. கரம் மசாலா - 1/4 தே. கரண்டி
  11. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
  12. மிளகாய் தூள் - 1/4 தே. கரண்டி
  13. இஞ்சி பூண்டு விழுது - 1 தே. கரண்டி
  14. அரிசி மாவு - 1 மே. கரண்டி
  15. எண்ணெய் - பொறிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஊற வைத்த கடலைப் பருப்பை மிக்ஸியில், பெருஞ்சீரகத்துடன் சேர்த்து கர மொரவென அரைக்கவும்.
  2. பின்பு அரைத்த விழுதுடன், அனைத்துப் பொருட்களையும்(எண்ணெயைத் தவிர ) ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறவும்.
  3. கிளறிய கலவையை சிறு சிறு உருண்டைகள் ஆக்கவேண்டும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு சூடாக்கவும்.
  5. எண்ணெய் சூடான பின்பு, உருண்டைகளை வடை போல் தட்டி எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
  6. சுவையான முருங்கை கீரை வடை தயார். தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்