வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைப் பொங்கல்

Photo of Sweet Pongal by Mahima Chandani at BetterButter
367
8
4.0(0)
0

சர்க்கரைப் பொங்கல்

May-22-2016
Mahima Chandani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரைப் பொங்கல் செய்முறை பற்றி

இந்த உணவு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. முதன்முதலில் சென்னை சரவண பவனில் சாப்பிட்டேன். இந்த உணவுக் குறிப்பு இந்திய ஆரோக்கிய உணவுக்குறிப்புகள் என்ற வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • நவ்ரதாஸ்
 • தமிழ்நாடு
 • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. 1/2 கப் அரிசி
 2. 4 தேக்கரண்டி பாசிப்பயிர்
 3. 4-5 தேக்கரண்டி சர்க்கரை. சுவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்
 4. 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
 5. ஒரு சிட்டிகை உணவு கற்பூரம். என்னிடம் இது இல்லை அதனால் இதைத் தவிர்த்துவிட்டேன்.
 6. 3 தேக்கரண்டி நெய்
 7. 7-8 முந்திரி பருப்பு
 8. 10-12 உலர்ந்த திராட்சை

வழிமுறைகள்

 1. வாசனை வரும்வரை அரிசியையும் பாசிப்பயிரையும் தனித்தனியே மேற்கொண்டு எதுவும் சேர்க்காமல் வறுத்துக்கொள்ளலம்.
 2. அரிசியையும் பருப்பையும் கழுவி திறந்த பாத்திரத்தில் அல்லது குக்கரில் கொதிக்கவிடவும்
 3. இதற்கிடையில் முந்திரி பருப்பையும் உலர்ந்த திராட்சையையும் நெய்யில் வறுத்துத் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 4. அரிசியும் பருப்பு வெந்ததுமே சற்றே மசித்துக்கொள்ளவும்.
 5. ஒரு திறந்த பாத்திரத்தில் இந்த அரிசி பருப்புக் கலவையைச் சேர்த்து ஏலக்காய் தூள், சர்க்கரையைச் சேர்க்கவும்.
 6. சர்க்கரை உறுகட்டும். சிறு தீயில் சர்க்கரை உறுகும்வரையும் கலவை பளபளப்பாகும்வரையிலும் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
 7. நான் முந்திரிபருப்பு உலர் திராட்சையில் பாதியை சர்க்கரைச் சேர்க்கும்போது சேர்த்தேன், மீதமுள்ளதை அலங்கரிப்பதற்காக எடுத்து வைத்துக்கொண்டேன்.
 8. கற்பூரத்தை நீங்கள் சேர்ப்பதாக இருந்தால் இப்போது சேர்த்து பாத்திரத்தை 2 நிமிடங்கள் மூடி வைக்கவும். என்னிடம் கற்பூரம் இல்லாததால், இந்த வழிமுறையை நான் தவிர்த்துவிட்டேன்.
 9. தாராளமாக நெய்விட்டும் வறுத்த முந்திரியால் அலங்கரித்ததும் சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்