Photo of Ragi Murukku by Sundari Pnp at BetterButter
2543
28
4.7(0)
0

ராகி மாவு

May-22-2016
Sundari Pnp
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு மாவு - 1 கப்
  2. அரிசி மாவு - 1 கப்
  3. பொட்டுக்கடலை - 1/4 கப்
  4. சீரகம் - 2 தேக்கரண்டி
  5. எள் - 2 தேக்கரண்டி
  6. சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி அல்லது சுவைக்கேற்ற அளவு
  7. பெருங்காயம் - 2 சிட்டிகை
  8. உப்பு - சுவைக்கேற்ற அளவு
  9. தண்ணீர் - பிசைவதற்கு
  10. வெண்ணெய் அல்லது நெய் - 1 தேக்கரண்டி
  11. எண்ணெய் - பொரிப்பதற்கு + முறுக்கு அச்சில் தடவுவதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு மிக்சியில் பொட்டுக்கடலையை பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
  2. அகலமான ஒரு கலவைப் பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அரிசி மாவு, கேழ்வரகு மாவு, பவுடர் செய்யப்பட்ட பொட்டுக்கடலை, சீரகம், எள், சிவப்பு மிளகாய்த் தூள், பெருங்காயம், உப்பு, வெண்ணெய் அல்லது நெய். நன்றாகக் கலக்கவும். ஒரு கடாயில் தண்ணீரைக் கொதிக்கவிடவும். கொதி வந்ததும், அடுப்பை நிறுத்தவும்.
  3. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மிருதுவான மாவாக பிசைந்துகொள்ளவும். ஆரம்பத்தில் தண்ணீர் சூடாக இருக்கும்போது ஒரு கரண்டியைப் பயன்படுத்தவும். கைகளால் பிசைய முடியும் எனும்போது, மாவைத் தயாரிக்க கைகளைப் பயன்படுத்தலாம். மாவு ஈரப்பதமாக இருக்கவேண்டும்.
  4. மாவை சுவைத்துப் பார்த்து தேவைப்பட்டால் பொருள்களை சரிசெய்யவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தவும், பொரிப்பதற்கு. இதற்கிடையில் முறுக்கு அச்சில் எண்ணெய் தடவிக்கொள்ளவும். கேழ்வரகு முறுக்கு மாவால் முறுக்கு அச்சினை நிரப்பவும். ஆரம்பத்தில் கொஞ்சமான மாவைக்கொண்டு சரிபார்ப்பது எப்போதும் நல்லது, பிறகு அச்சில் முழுமையாக மாவை நிரப்பலாம்.
  6. நான் ஒரு ஸ்டார் தட்டைப் பயன்படுத்தினேன். நீங்கள் விரும்பும் அச்சை பயன்படுத்தலாம். ஆனால் ஓட்டைகளின் எண்ணிக்கை உங்களுக்கு சரிவருகிறதா என்று பார்த்துக்கொள்ளவேண்டும்.
  7. முறுக்கு சரியாக வருகிறதா என்று பார்க்கவும், வட்ட வடிவத்தில் தயாரிக்கலாம். அடிக்கடி மாவு உடைந்தால், கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவேண்டும் என்று பொருள். அப்போதுதான் அது சற்றே பசை போல் இருந்து உடையாமல் இருக்கும்.
  8. மாவு மிகவும் தண்ணீர் போல் அழுத்துவதற்கு ஒட்டிக்கொண்டு வந்தால், அதிகமான அரிசி மாவு சேர்த்து மீண்டுமு பிசையவேண்டும். மாவை ஒரு மூடியால் அல்லது ஈரமானத் துணியால் மூடவும், முறுக்கைப் பிழிந்து முடிக்கும்வரை ஈரப்பதம் இருக்கவேண்டும் என்பதால்.
  9. சிக்கரமே காய்ந்துவிட்டால் ஈரப்பதத்தைத் தக்கவைக்க கொஞ்சம் தண்ணீரைத் தெளித்துக்கொள்ளவும்.
  10. கரண்டியின் பின்புறத்தில் எண்ணெய் தடவி முறுக்கு அச்சியினால் (படம் அடுத்துவரும் வழிமுறையில் உள்ளது) கரண்டியில் வட்ட வடிவத்தில் முறுக்கைச் செய்துகொள்ளவும். ஒரு சமயத்தில் 3 நடுத்தர அளவுள்ள முறுக்கைத் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
  11. எண்ணெய் சூடானதும், ஒரு சிட்டிகை மறுக்கு மாவை எண்ணெயில் விடவும். உடனே எழும்பினால், எண்ணெய் தயார். எண்ணெயில் முறுக்கை விட்டு கரண்டியால் மேலும் கீழும் திருப்பவும்.
  12. நன்றாகப் பொரிக்கவும், எண்ணெயில் பொரியும் சப்தம் குறையும்வரை. ஏற்கனவே கேழ்வரகின் நிறம் பழுப்பாக இருப்பதால், முறுக்கு நிறத்தின் அடிப்படையில் நன்றாக வெந்திருக்கிறதா என்று சோதிப்பது கடினம்.
  13. மேலும் கீழும் திருப்பிப்போட்டு முறையாக பொரிக்கவும். மீதமுள்ள முறுக்கு மாவிற்கும் இதே முறையைப் பின்பற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்