முட்டை அடை | Egg Adai in Tamil

எழுதியவர் hajirasheed haroon  |  27th Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Egg Adai by hajirasheed haroon at BetterButter
முட்டை அடைhajirasheed haroon
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

1

0

முட்டை அடை recipe

முட்டை அடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Egg Adai in Tamil )

  • முட்டை 3
  • வெங்காயம் ரெண்டு
  • கொத்தமல்லி இலை
  • பெப்பர் தூள் 4 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  • உப்பு தேவையான அளவு
  • பச்சரிசி மாவு 2 ஸ்பூன்
  • தேங்காய் விழுது 3ஸ்பூன்
  • தேவையான அளவு எண்ணெய்

முட்டை அடை செய்வது எப்படி | How to make Egg Adai in Tamil

  1. l வெங்காயம் கொத்தமல்லி இலை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்
  3. முட்டை ஊற்றிய பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை பெப்பர் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும்
  4. முட்டை கலவையில் அரைத்த தேங்காய் விழுது பச்சை அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  5. தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஒவ்வொரு அடையாக எடுத்து ஊற்றவும்
  6. இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  7. சுவையான முட்டை அடை தயார்

எனது டிப்:

பச்சரிசி மாவிற்கு பதிலாக தோசை மாவு இரண்டு கரண்டி கூட உபயோகிக்கலாம் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்

Reviews for Egg Adai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.