வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்டு மினி பாகற்காய்

Photo of Stuffed mini bitter gourd by Krishnasamy Vidya Valli at BetterButter
426
2
0.0(0)
0

ஸ்டப்டு மினி பாகற்காய்

Jun-27-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்டு மினி பாகற்காய் செய்முறை பற்றி

பிஞ்சு பாகற்காயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு பொடி அடைத்து செய்யும் கறி வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிஞ்சு பொடி பாகற்காய் 15 முதல் 20
  2. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  3. உப்பு முக்கால் தேக்கரண்டி
  4. புளி பாதி நெல்லிக்காய் அளவு
  5. வெல்லம் -4 சிட்டிகை
  6. வறுத்து திரிக்க தேவையானவை
  7. கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  9. தேங்காய் துருவல் ஒரு மேசைக்கரண்டி
  10. மிளகாய் வத்தல் 3
  11. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  12. கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி
  13. பட்டை ஒரு சிறிய துண்டு
  14. ஏலக்காய் கிராம்பு தலா 2
  15. தாளிக்க தேவையானவை
  16. எண்ணெய் 2 தேக்கரண்டி
  17. கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாகற்காயை நான்காக கீறி உள்ளே உள்ள விதையை நீக்கி கொள்ளவும்
  2. கொதிக்கும் வெந்நீரில் பாகற்காயை பாதி அளவு உப்பு, புளி , வெல்லம் மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வேக விடவும்
  3. தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்
  4. வறுக்க கொடுத்தவற்றை வறுத்து மீதி உள்ள உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக திரித்துக் கொள்ளவும்
  5. வறுத்து திரித்ததை பாகற்காயில் ஸ்டஃப் செய்து கொள்ளவும்
  6. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து ஸ்டாப் செய்த பாகற்காயை அடுக்கி வைத்து இரண்டு நிமிடம் கழித்து கிளறி விடவும்
  7. அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்
  8. முறுமுறு வென்று ஆனவுடன் அடுப்பை அணைத்து விட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்