வீடு / சமையல் குறிப்பு / புதினா ஓட்ஸ் வெஜிடபிள் கிச்சடி

Photo of Pudina Oats Vegetable Kichadi by Sowmya Sundar at BetterButter
363
2
0.0(0)
0

புதினா ஓட்ஸ் வெஜிடபிள் கிச்சடி

Jun-28-2018
Sowmya Sundar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புதினா ஓட்ஸ் வெஜிடபிள் கிச்சடி செய்முறை பற்றி

காய்கறிகள் ,ஓட்ஸ் மற்றும் புதினா மசாலா விழுது சேர்த்து செய்த ஹெல்த்தியான கிச்சடி.எண்ணெய் அதிகம் இல்லாத ஒரு சத்தான ப்ரேக்ஃபாஸ்ட் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஓட்ஸ் -1 1/2 கப்
  2. நறுக்கிய பீன்ஸ்,காரட்,தக்காளி,உருளை சேர்த்து-1கப்
  3. வெங்காயம்-1
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய்-1டேபிள் ஸ்பூன்
  6. கடுகு-1 டீஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
  8. சீரகம்-1 டீஸ்பூன்
  9. கடலை பருப்பு-1 டீஸ்பூன்
  10. பெருங்காயம்-1/2 டீஸ்பூன்
  11. கறிவேப்பிலை-சிறிது
  12. எலுமிச்சை சாறு-2 டீஸ்பூன்
  13. அரைக்க -
  14. புதினா இலை-1/2கப்
  15. கொத்தமல்லி இலை-1/4 கப்
  16. பச்சை மிளகாய்-3
  17. இஞ்சி-1துண்டு
  18. பூண்டு-2பல்

வழிமுறைகள்

  1. .அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.பாசிப்பருப்பை தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.பின் காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் அரைத்த விழுது,உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் ஊற வைத்த பாசிப்பருப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  4. முக்கால்வாசி வெந்ததும் ஓட்ஸ் சேர்த்து வேக வைக்கவும்
  5. வெந்ததும் எலுமிச்சை சாற்றை கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்