வீடு / சமையல் குறிப்பு / மேத்தி லேடீஸ் ஃபிங்கர்

Photo of Methi okra by Kathija Lathif at BetterButter
295
2
0.0(0)
0

மேத்தி லேடீஸ் ஃபிங்கர்

Jun-28-2018
Kathija Lathif
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மேத்தி லேடீஸ் ஃபிங்கர் செய்முறை பற்றி

nutrient rich

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெந்தயக்கீரை இரண்டு பஞ்ச்
  2. வெண்டைக்காய் 1/4கிலோ
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. இஞ்சி பூண்டு விழுது 1/2தேக்கரண்டி
  6. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  7. மல்லித் தூள் 1 டீஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் 1/4டீஸ்பூன்
  9. சீரகத்தூள் 1/2டீஸ்பூன்
  10. கடுகு ஒரு சிட்டிகை
  11. சீரகம் ஒரு சிட்டிகை
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெந்தயக் கீரை ஆய்ந்து நன்றாக கழுவி வைக்கவும்
  2. வெண்டைக்காய் விருப்பமான நீளத்தில் நறுக்கவும்
  3. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்
  4. ஒரு வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளிக்கவும்
  5. தாளித்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  7. பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்
  8. தக்காளி நன்கு மசிந்ததும் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  9. பிறகு வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
  10. வெண்டைக்காய் முக்கால் பாகம் வெந்ததும் கழுவி வைத்துள்ள வெந்தயக்கீரை சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்