வீடு / சமையல் குறிப்பு / திரட்டிப்பால்

Photo of Thirattipal by Sundari Pnp at BetterButter
6076
6
4.0(0)
0

திரட்டிப்பால்

May-22-2016
Sundari Pnp
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் - 500 மிலி
  2. சர்க்கரை - 150 கி
  3. பொடியாக்கப்பட்ட வெல்லம் - 150 கி
  4. தேங்காய் - 1/2 துண்டு துருவப்பட்டது
  5. ஏலக்காய்த் தூள் - 2 தேக்கரண்டி
  6. முந்திரி பருப்பு - 1 தேக்கரண்டி நறுக்கப்பட்டது
  7. நெய் - 75 மிலி +4 தேக்கரண்டி
  8. பாசிப்பயிர் - 40 கி

வழிமுறைகள்

  1. பாசிப்பயிரை எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும். கருகாமல் பார்த்துக்கொள்ளவும். ஆறவிட்டு ஒரு மிக்சியில் மென்மையானப் பவுடராக அரைத்துக்கொள்ளவும். எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. தண்ணீர் சேர்க்காமல் 2 நிமிடங்களுக்கு தேங்காய்த்துருவலை அரைத்துக்கொள்ளவும். மென்மையானப் பவுடராக இருக்கக்கூடாது. திரட்டிப்பாலை மொறுமொறுப்பாகச் செய்வதற்கு. பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.
  3. பால், வெல்லம், சர்க்கரை, தேங்காய் ஆகியவற்றை ஒரு கடாயில் எடுத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
  4. கலவை கொதிவந்ததும், பாசிப்பயிர் பவுடர், ஏலக்காய் பவுடர் சேர்த்து கடாயில் திரட்டிப்பால் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க அடிக்கடி கலக்கவும். ஒட்டாமல் வருவதற்காக கலக்கிக்கொண்டே இருக்கவும்.
  5. திட்டிப்பால் அடர்த்தியானச் சாந்தாக அல்லது பால்கோவாபோல் வந்ததும் நிறுத்திவிடவும். இந்த நிலையில் குமிழ்கள் வரத்துவங்கும். இதுதான் நிறுத்துவதற்குச் சரியான சமயம்.
  6. 500 மிலி பாலுக்கு ஒட்டுமொத்தச் செயல்பாடும் 30-35 நிமிடங்கள் ஆகும். உடனே ஒரு சேமிப்புப் பாத்திரத்திற்கு மாற்றிவிடவும். திரட்டிப் பாலின் மீது உருக்கிய நெய் 3 தேக்கரண்டி ஊற்றவும்.
  7. 1 தேக்கரண்டி நெய்யில் கொஞ்சம் முந்திரிபருப்பு போட்டு அது பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதை திரட்டிப்பாலில் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்