பொட்டுக்கடலை லட்டு | Pottukadalai Laddu in Tamil

எழுதியவர் Sundari Pnp  |  22nd May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Pottukadalai Laddu by Sundari Pnp at BetterButter
பொட்டுக்கடலை லட்டுSundari Pnp
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

96

0

பொட்டுக்கடலை லட்டு recipe

பொட்டுக்கடலை லட்டு தேவையான பொருட்கள் ( Ingredients to make Pottukadalai Laddu in Tamil )

 • முந்திரி பருப்பு - 6-10 உடைத்தது
 • ஏலக்காய் - 1
 • நெய் - 1/4 கப்
 • சர்க்கரை - 1/2 கப்
 • பொட்டுக்கடலை - 1 கப்

பொட்டுக்கடலை லட்டு செய்வது எப்படி | How to make Pottukadalai Laddu in Tamil

 1. வாசனை ஙெளியேறும் வரை பொட்டுக்கடலையை எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். அதிக நேரம் பிடிக்காது. வாசனை வந்த்தும் உடனே அடுப்பை நிறுத்தவும். கருவிடாதீர்கள். எடுத்து வைத்து ஆறவிடவும்.
 2. பொட்டுக்கடலை, ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை ஒரு மிக்கியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும். மென்மையாக அரைக்கப்படாவிட்டால் சலித்துக்கொள்ளவும்.
 3. மென்மையானப் பவுடர் இருந்தால் சலிக்கத்தேவையால்லை. ஒரு அகலமானப் பாத்திரத்தில் அல்லது தட்டில் தயாராக வைத்துக்கொள்ளவும்.
 4. ஒரு கடாயைச் சூடுபடுத்தி நெய்யைச் சேர்க்கவும். உடைத்த முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து தயாரித்தி வைத்துள்ள கலவையில் சேர்க்கவும்.
 5. மீதமுள்ள நெய்யை கடாயில் சேர்த்து சூடுபடுத்துவும். நெய் முற்றிலுமாக உருகி சூடாக இருக்கும்போது உடனே பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும். ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கவும்.
 6. சூடாக இருக்கும்போதே லட்டு பிடிக்கவும். நேரமெடுத்து லட்டு பிடிக்கவும். இல்லையேல் அவை எளிதில் உடைத்துவிடும்.
 7. மா லட்டு/ பொட்டுக் கடலை லட்டு தயார். லட்டைக் காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.

எனது டிப்:

1. டால்டா/வணஸ்பதி, நெய்யை 1:3 விகிதத்தில் பயன்படுத்தலாம். எவ்வளவு அதிகமாக நெய்நைப் பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவு ருசியாக இருக்கும். 2. பொட்டுக்கடலைக்குப் பதிலாக பாசிப் பருப்பையும் பயன்படுத்தி இதே வழிமுறையைப் பின்பற்றலாம். வட இந்தியாவில் இது பிரபலம். இரண்டுமே குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது. 3. எளிமையாக்க அதிகமாகத் தயாரிக்கும்போது பருப்பை ரைஸ் மில்லில் அரைத்துக்கொள்ளலாம். 5. லட்டு தயாரிக்கி உருக்கிய நெய்யை மட்டுமே பயன்படுத்தவும். இல்லையேல் லட்டு எளிதில் உடைந்துவிடும். 6. நெய் இன்னும் தேவையென்றால், மீண்டும் நெய்யை உருக்கிப் பயன்படுத்தவும். அல்லது 1/3 கப் நெய்யை உருக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கலாம். அதனால் அளவைப் பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம். 7. நெய் அதிகமாகி உங்களால் லட்டு பிடிக்க இயலவில்லை என்றால், பொட்டுக்கடலையை மென்மையானப் பவுடராக அரைத்து அதனோடு சேர்த்துக்கொள்ளலாம்.

Reviews for Pottukadalai Laddu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.