குடமிளகாய் பருப்பு உசிலி | Capsicum Parupu Usili in Tamil

எழுதியவர் Revathy Murali  |  22nd May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Capsicum Parupu Usili by Revathy Murali at BetterButter
குடமிளகாய் பருப்பு உசிலிRevathy Murali
  • ஆயத்த நேரம்

    45

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

27

0

குடமிளகாய் பருப்பு உசிலி recipe

குடமிளகாய் பருப்பு உசிலி தேவையான பொருட்கள் ( Ingredients to make Capsicum Parupu Usili in Tamil )

  • தாளிப்புக்கு: கடுகு - 1/4 தேக்கரண்டி, எண்ணெய் - 3 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு- 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை
  • தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
  • கல் உப்பு - சுவைக்கேற்ற அளவு
  • பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் - 2 எண்ணிக்கை நடுத்தர அளவு
  • குடமிளகாய் - 1 சிறிய அளவு - பொடியாக நறுக்கப்பட்டது
  • துவரம் பருப்பு 1 கப் ( அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கப்பட்டது)

குடமிளகாய் பருப்பு உசிலி செய்வது எப்படி | How to make Capsicum Parupu Usili in Tamil

  1. துவரம் பருப்பில் இருந்து தண்ணீரை வடிக்கட்டி, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம், தேங்காய் துருவல், உப்பு ஆகியவற்றைக் கொஞ்சம் தண்ணீரோடு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கலவை பாதி அடர்த்தியாக இருக்கவேண்டும், தண்ணீராக இருக்கக்கூடாது.
  2. கடாயில் எண்ணெய் ( நான்-ஸ்டிக் கடாய்). எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும்.வெடிக்கட்டும். உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்க்கவும்.
  3. அரைத்தக் கலவையைச் சேர்த்து பச்சை வாடை போகும்வரையும் கலவை பானையில் ஒட்டாமல் இருக்கும் வரையிலும் தொடர்ந்து கலக்கவும்.
  4. வேகவைத்த பருப்புடன் குடமிளகாயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சாதத்துடனும் அதிகமாகக் குழம்புடனும் பரிமாறுக.

எனது டிப்:

இந்தக் குடமிளகாய்க்குப் பதிலாக பீன்ஸ், கொத்தவரங்காய் அல்லது முட்டைக்கோசு சேர்த்துக்கொள்ளலாம்.

Reviews for Capsicum Parupu Usili in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.