வீடு / சமையல் குறிப்பு / மீன் போலுச்சது

Photo of Meen polluchadhu by Sashi Prakash at BetterButter
827
3
0.0(0)
0

மீன் போலுச்சது

Jun-28-2018
Sashi Prakash
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மீன் போலுச்சது செய்முறை பற்றி

கேரளாவில் பிரபலமான மீன் உணவு ஒரு முறை படகு இல்லத்தில் இருந்த பொழுது அருகில் இருந்து கற்ற ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கேரளா
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஜிலேபி மீன் - 2
  2. எலுமிச்சை - 1/2
  3. மிளகாய் தூள் - 3 டீஸ் ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
  5. மிளகு தூள் - 1 டீஸ் ஸ்பூன்
  6. மசாலா செய்ய
  7. பெரிய வெங்காயம் - 1
  8. தக்காளி - 2
  9. இஞ்சி - 1"
  10. பூண்டு - 6
  11. பச்சை மிளகாய் - 1
  12. மிளகாய் தூள் - 1 1/2 டீஸ் ஸ்பூன்
  13. மல்லி தூள் - 1 1/2 டீஸ் ஸ்பூன்
  14. வாழை இலை - 1
  15. வாழை நார் - கட்டுவதற்கு
  16. தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

  1. மீனை நன்கு கழுவி கீறல் போட்டு கொள்ளவும்
  2. மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி மீன் மீது தடவி 1 மணி நேரம் ஊற விடவும்
  3. பின்பு தேங்காய் எண்ணெய் - 3 மேஜை கரண்டி விட்டு இருபுறமும் பொரித்து எடுக்கவும்
  4. இஞ்சி, பூண்டு, மிளகாய் அரைத்து கொள்ளவும்
  5. அதே எண்ணெயில் வெங்காயம் போட்டு நன்கு வதக்கி இஞ்சி விழுது போட்டு பச்சை வாசம் போகும் வரை வணக்கவும்
  6. அதனுடன் மிளகாய் தூள் மல்லி தூள் போட்டு பின்பு தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வணக்கவும்
  7. வாழை இலையை நெருப்பில் காட்ட வேண்டும் மடக்கும் பொழுது உடையாமல் இருக்க
  8. இலையில் மசாலா சிறிது வைத்து பின்பு அதன் மேல் பொரித்த மீன் வைத்து அதன் மேல் மேலும் சிறிது மசாலா வைத்து கட்டவும்
  9. சட்டியில் 2 டீஸ் ஸ்பூன் எண்ணெய் விட்டு சிம்மர் இல் 5 நிமிடம் இருபுறமும் வேக வைக்கவும்
  10. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்