வீடு / சமையல் குறிப்பு / பாலக் பன்னீர்

Photo of Palak paneer by Sashi Prakash at BetterButter
382
1
0.0(0)
0

பாலக் பன்னீர்

Jun-28-2018
Sashi Prakash
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாலக் பன்னீர் செய்முறை பற்றி

வட இந்தியாவில் செய்யக்கூடிய கிரேவி வகை சப்பாத்தியுடன் நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாலக் கீரை - 2 கட்டு
  2. பன்னீர் - 1
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 1
  5. இஞ்சி பூண்டு விழுது - டீஸ் ஸ்பூன்
  6. கொத்து மல்லி தூள் - 2 டீஸ் ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
  8. சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
  9. கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  10. ஃப்ரஷ் கிரீம் - 3 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து கொதித்தவுடன் பாலக் கீரையை போடவும்
  2. இரண்டு நிமிடம் கழித்து எடுத்து குளிர்ந்த நீரில் வடிகட்டவும்
  3. பாலக் கீரையை நன்கு அரைத்து கொள்ளவும்
  4. பண்ணீரை துண்டுகளாக வெட்டி குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும்
  5. கடாயில் பட்டர் போட்டு அதில் வெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் தூள் அனைத்தும் போடவும்
  7. பாலக் விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  8. பச்சை வாசனை போனவுடன் வெட்டி வைத்த பன்னீர் சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்
  9. கடைசியாக பிரஷ் கிரீம் மேலே சேர்த்து அடுப்பை அணைத்து சப்பாத்தியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்