வீடு / சமையல் குறிப்பு / தக்காளி மசியல்

Photo of Tomatto masiyal by Deepa Srivatsan at BetterButter
145
1
0.0(0)
0

தக்காளி மசியல்

Jun-29-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தக்காளி மசியல் செய்முறை பற்றி

பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்ப்பதால் சுவை அதிகமாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெங்களூர் தக்காளி நான்கு
  2. பச்சை மிளகாய் 4
  3. மிளகாய்வற்றல் 2
  4. கறிவேப்பிலை சிறிதளவு
  5. குழம்பு பொடி இரண்டரை ஸ்பூன்
  6. கடுகு அரை டீஸ்பூன்
  7. வெந்தயம் கால் டீஸ்பூன்
  8. புளி ஒரு சிறு நெல்லிக்காயளவு
  9. மஞ்சள் தூள் சிறிதளவு
  10. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  11. கறிவேப்பிலை சிறிதளவு
  12. பாசிப்பருப்பு கால் கப்
  13. துவரம்பருப்பு கால் கப்
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புளியை நன்றாக கரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. தக்காளி கருவேப்பிலை பச்சை மிளகாய் மிளகாய் வற்றல் ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கறிவேப்பிலை பச்சைமிளகாய் வரமிளகாய் தக்காளி ஆகியவற்றை சேர்க்கவும்
  4. இரண்டரை டீஸ்பூன் குழம்பு பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்
  6. பின் புளிக் கரைசலை வாணலியில் ஊற்றவும்
  7. பின் பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  8. பச்சை வாசனை போனதும் வெந்த பருப்பை சேர்த்து நன்றாகக் கொதி வந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்