Photo of Yericheri by Abinaya bala at BetterButter
328
2
0.0(0)
0

எரிசேரி

Jun-29-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

எரிசேரி செய்முறை பற்றி

சேனைக்கிழங்கு வைத்து செய்யப்படும் ஒரு வகையான சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சேனைக்கிழங்கு -200கி
  2. சின்ன வெங்காயம் -10
  3. தேங்காய்த்துருவல் - 1 மூடி
  4. விதை மல்லி - 1 மேசைக்கரண்டி
  5. பெருஞ்சீரகம் - 1 மேசைக்கரண்டி
  6. பட்டை - சிறிதளவு
  7. மிளகு - 1 மேசைக்கரண்டி
  8. பூண்டு - 4 பல்
  9. கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க
  10. தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  11. உப்பு - தேவையான அளவு
  12. கறிவேப்பிலை, கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. சேனைக்கிழங்கை தனியாக நீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  2. தேங்காயை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  3. பொன்னிறமாக வறுத்த தேங்காயில் 2ஸ்பூன் தனியாக எடுத்து வைக்கவும்
  4. பெருஞ்சீரகம், மிளகு, பட்டை, பூண்டு, விதை மல்லி இவற்றை வறுத்து கொள்ளவும்
  5. வறுத்த தேங்காய் மற்றும் வறுத்த பொருட்களை சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்
  6. வேக வைத்த சேனைக்கிழங்கு உடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
  7. கடைசியாக தனியாக எடுத்து வைத்த வறுத்த தேங்காய் சேர்க்கவும்
  8. மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் சேர்க்கவும்
  9. மல்லி இலையை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்