வீடு / சமையல் குறிப்பு / சோயா சன்க்ஸ் சில்லி

Photo of Soya chunks chilli by Rabia Alaudeen at BetterButter
327
0
0.0(0)
0

சோயா சன்க்ஸ் சில்லி

Jun-29-2018
Rabia Alaudeen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா சன்க்ஸ் சில்லி செய்முறை பற்றி

சைவ உணவு சாப்பிடும் அனைவருக்கும் பிடித்தமான ரெசிபி இது. இப்போது பிராய்லர் கோழியை சாப்பிட கூடாது என்று சொல்லி கொண்டே இருக்கும் இந்த வேளையில் குழந்தைகளுக்கு கோழிக்கு மாற்றாக சோயா சில்லியை கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா சன்க்ஸ் 100 கிராம்
  2. எண்ணெய் பொரிப்பதற்கு
  3. உப்பு சுவைக்கேற்ப
  4. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  5. சோளம் மாவு 1 தேக்கரண்டி
  6. எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  2. பிறகு அந்த சுடுதண்ணீர் பாத்திரத்தை அடுப்பை விட்டு இறக்கி சோயாவை சுடுதண்ணீரில் சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
  3. பிறகு தண்ணீரை வடித்து விட்டு சோயாவில் உள்ள தண்ணீரை கையால் நன்றாக பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்.
  4. பின்னர் சோயாவை நான்காக வெட்டவும்.
  5. அதன் பின் சோயாவில் உப்பு, தயிர், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை பழச்சாறு, சோள மாவு சேர்த்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
  6. நன்றாக ஊறியதும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோயாவை மிதமான சூட்டில் வறுத்து எடுத்து கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்