வீடு / சமையல் குறிப்பு / ஆட்டு ஈரல் மிளகு குழம்பு

Photo of Mutton liver pepper gravy by Fathima Beevi at BetterButter
1576
2
0.0(0)
0

ஆட்டு ஈரல் மிளகு குழம்பு

Jun-29-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஆட்டு ஈரல் மிளகு குழம்பு செய்முறை பற்றி

ஆட்டு ஈரல் மிளகு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டு ஈரல் - 1/4 கிலோ
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி  - 2
  4. பச்சை மிளகாய்- 1
  5. கருலேப்பில்லை- சிறிது
  6. இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
  7. மிளகு சீரகத் தூள் - 1/2 டீ ஸ்பூன்
  8. கொத்த மல்லி இலை- சிறிது
  9. உப்பு- தேவையான அளவு
  10. பெருங் காயத்தூள்- ஒரு சிட்டிகை
  11. மஞ்சள் தூள்- 1/2 டீ ஸ்பூன்
  12. நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  13. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
  14. தேங்காய் - 1/4 மூடி
  15. மிளகு- 1/2 தேக்கரண்டி
  16. சீரகம் - 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மசாலாவிற்கு தேவையான பொருட்களை தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்து எடுக்கவும்
  2. ஆட்டு ஈரலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
  3. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. ஒரு குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. பின்பு கருலேப்பில்லை, மிளகு சீரகத் தூள், பெருங் காயத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  7. ஆட்டு ஈரலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. பின்பு அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
  9. நன்கு வதங்கியதும் சிறிது தண்ணீர் சேர்த்து  கிளறி குக்கரை மூடி 10 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  10. விசில் அடங்கியதும் கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்