வீடு / சமையல் குறிப்பு / முவ்வகை ஹீமஸ்

Photo of Trios of Hummus by Hameed Nooh at BetterButter
273
4
0.0(0)
0

முவ்வகை ஹீமஸ்

Jun-29-2018
Hameed Nooh
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முவ்வகை ஹீமஸ் செய்முறை பற்றி

கொண்டைக்கடலையை வேக வைத்து அதிலே பீட்ரூட் குடை மிளகாய் பச்சைப் பட்டாணி புதினா மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தனித்தனியாக அரைத்து செய்ய கூடிய ஒரு ஆரோக்யமான மிடில் ஈஸ்ட் உணவாகும். இதனை வெள்ளரி கேரட் போன்ற காய்களோடு சேர்த்து சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீட்ரூட் ஹீமஸ் செய்ய :
  2. பீட்ரூட் பாதி
  3. சிகப்பு குடைமிளகாய் பாதி
  4. தக்காளி ஒன்று பெரியது
  5. வெள்ளை கொண்டைக்கடலை ஒரு கப்
  6. தாகினி பேஸ்ட் இரண்டு மேசைக்கரண்டிகள்
  7. பூண்டு இரண்டு பற்கள்
  8. மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி
  9. எலுமிச்சை சாறு 2 மேசைக்கரண்டி
  10. ஆலிவ் எண்ணெய் இரண்டு மேசைக்கரண்டி
  11. உப்பு சுவைக்கேற்ப
  12. புதினா பட்டாணி ஹீமஸ் செய்ய :
  13. புதினா ஒரு கப்
  14. பச்சைப் பட்டாணி கால் கப்
  15. வெள்ளை கொண்டைக்கடலை ஒரு கப்
  16. பூண்டு இரண்டு பற்கள்
  17. தாகினி பேஸ்ட் இரண்டு மேசை கரண்டி
  18. எலுமிச்சை சாறு 2 மேசைக்கரண்டி
  19. ஆலிவ் எண்ணெய் இரண்டு மேசைக்கரண்டி
  20. உப்பு சுவைக்கேற்ப
  21. கொக்கோ ஹுமஸ் செய்வதற்கு :
  22. நூடெல்லா பேஸ்ட் கால் கப்
  23. வெள்ளை கொண்டைக்கடலை ஒரு கப்
  24. தாகினி பேஸ்ட் இரண்டு மேசை கரண்டி
  25. ஆலிவ் எண்ணெய் இரண்டு மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.
  2. தக்காளியை சிறியதாக நறுக்கி அதோடு உப்பு மிளகாய்த்தூள் சிறிது மிளகுத்தூள் சேர்த்து வெயிலில் நன்றாக ஒரு நாள் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. முதலில் பீட்ரூட் மற்றும் குடைமிளகாயை ப்ரீ ஹிட் செய்யப்பட்ட அவனில் மேலே எண்ணெய் கொஞ்சம் ஊற்றி அரை மணி நேரம் பேக் செய்யவும்.
  4. பிறகு சூடு ஆறியதும் தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறியதாக வெட்டிக் கொள்ளவும்.
  5. இனி பீட்ரூட் ஹுமஸ்கு தேவையான பொருட்களில் எண்ணெய்யை தவிர்த்து ஏனைய பொருட்களை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
  6. பிறகு அதோடு எண்ணெய்யை ஊற்றி ஒரு சுற்று அரைத்தால் பீட்ரூட் ஹுமஸ் தயார்.
  7. புதினா பட்டாணி ஹுமஸ் செய்வதற்கு பட்டாணியை வேகவைத்து அதோடு கொண்டைக்கடலை புதினா பூண்டு தாகினி பேஸ்ட் எலுமிச்சைச் சாறு உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  8. நன்றாக அரைந்த பிறகு அதில் எண்ணெய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் புதினா பட்டாணி ஹுமஸ் தயார்
  9. கோக்கோ ஹுமஸ் செய்வதற்கு நூடெல்லா பேஸ்ட் வெள்ளை கொண்டைக்கடலை தாகினி பேஸ்ட் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  10. இப்பொழுது சுவையான மூன்று வண்ணம் உடைய ஹுமஸ்கள் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்