வீடு / சமையல் குறிப்பு / சோயா சன்க்ஸ் முட்டை ஃப்ரைடு ரைஸ்

Photo of Soya chunks egg fried rice by Rabia Alaudeen at BetterButter
396
1
0.0(0)
0

சோயா சன்க்ஸ் முட்டை ஃப்ரைடு ரைஸ்

Jun-29-2018
Rabia Alaudeen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சோயா சன்க்ஸ் முட்டை ஃப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

காய் கறிகள் சாப்பிட பிடிவாதம் செய்யும் குழந்தைகள் கூட விரும்பி உண்ணும் உணவு இது.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • சைனீஸ்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசுமதி அரிசி 1/2கிலோ
  2. பீன்ஸ் 100கிராம்
  3. காரட் 100கிராம்
  4. முட்டை கோஸ் 200கிராம்
  5. குடைமிளகாய் 1
  6. முட்டை 7
  7. எண்ணெய் 1 கப்
  8. சோயா சன்க்ஸ் 100கிராம்
  9. மிளகுத்தூள் 3 தேக்கரண்டி
  10. உப்பு சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. அரிசியை அரை மணி ஊர வைத்துக் கொள்ளவும்.
  2. அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து, ப்ரெஸ்ஸர் குக்கரில் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து சிறிது உப்பும் ஒரு துளி எண்ணெயும் சேர்த்து அடுப்பில் ஒரு விசில் வைத்து இறக்கவும்.
  3. குக்கரில் விசில் அடங்கியதும் சாதத்தை வெளியே எடுத்து நன்றாக ஆற விடவும், அப்படி செய்தால் தான் சாதம் உதிரியாக இருக்கும்.
  4. காய்களை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
  5. ஒரு பெரிய அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய காய்களை ஒன்றன் பின் ஒன்றாக வேக விடவும். எல்லா காய்களையும் ஒன்றாக சேர்த்து வேக வைத்தால் பொரியல் போன்று ஆகிவிடும்.
  6. முதலில் பீன்ஸை வேக வைத்து அதில் சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும், அவ்வாறே கேரட், முட்டை கோஸ், குடைமிளகாய் போன்ற காய்களுக்கும் தனித்தியே மிளகுத்தூளும் உப்பும் சேர்த்து வதக்கி இறக்குவும்.
  7. முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதில் சிறிது உப்பு கலந்து நன்கு கலக்கவும். கலக்கிய முட்டையை ஒரு சூடேறிய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற்றி நன்றாக கிளறிவிட்டு வேக விடவும்.
  8. சோயா சன்க்ஸ் சில்லியை செய்ய எனது ப்ரொபைலில் நான் பதிவிட்டுள்ள பதிவை பார்க்கவும்.
  9. இறுதியாக காய்கறிகள் சமைத்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சாதம், முட்டை மற்றும் சோயா சன்க்ஸை கலந்து நன்றாக கிளறிவிடவும்.
  10. சோயா சன்க்ஸ் முட்டை ஃப்ரைடு ரைஸ் தயார். சிறிது தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்