வீடு / சமையல் குறிப்பு / குலுக்கு ரொட்டி

Photo of kuluku Rotti by hajirasheed haroon at BetterButter
719
2
0.0(0)
0

குலுக்கு ரொட்டி

Jun-29-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குலுக்கு ரொட்டி செய்முறை பற்றி

ராகி மாவு வெல்லம் வேர்க்கடலை முந்திரிப்பருப்பு சேர்த்து செய்துள்ளது ஆரோக்கியமானது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு ஒரு கப்
  2. அரிசி மாவு கால் கப்
  3. தேங்காய் துருவல் 3 ஸ்பூன்
  4. முந்திரிபருப்பு 5
  5. உப்பு தேவையான அளவு
  6. வேர்க்கடலை ரெண்டு ஸ்பூன்
  7. வெல்லம் ஒரு கட்டி
  8. உருக்கிய நெய் ஒரு ஸ்பூன்
  9. தண்ணீர் ஒரு டம்ளர்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. ராகி மாவில் உப்பு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் நெய் ஊற்றி முந்திரி வேர்கடலை தேங்காய் துருவலை வறுத்து கொள்ளவும்
  5. ஒரு பேனில் நெய் ஊற்றி ராகி மாவை சின்ன சின்ன வடைகளாக தட்டி சுட்டு எடுக்கவும்
  6. ராகி தோசை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  7. கரைத்து வைத்துள்ள வெல்லத்தை வடிகட்டி மற்றொரு பானில் ஊற்றி கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்
  8. இந்தப் பாகில் துண்டுகளாக வெட்டிய ராகி ரொட்டி களை சேர்த்து நன்கு கிளறவும்
  9. ஒரு தட்டில் நன்கு வெள்ளத்தில் ஊறிய ராகி ரொட்டிகள் வறுத்த முந்திரி பருப்பு வே்க்கடலை தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
  10. ரொம்பவே ஆரோக்கியமானது வெல்ல வேர்கடலை சேர்த்து இருப்பதால் குழந்தைகளும் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்