வீடு / சமையல் குறிப்பு / சுட்ட கத்தரிக்காய் கோதுசு

Photo of Smoked Eggplant gothsu by Fathima Beevi at BetterButter
240
1
0.0(0)
0

சுட்ட கத்தரிக்காய் கோதுசு

Jun-29-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுட்ட கத்தரிக்காய் கோதுசு செய்முறை பற்றி

சுட்ட கத்தரிக்காய் கோதுசு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் -1
  2. பச்சை மிளகாய்-1
  3. சிறிய வெங்காயம்-7
  4. பூண்டு பற்கள்-4
  5. காய்ந்த மிளகாய்-2
  6. கருலேப்பில்லை- சிறிது
  7. புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
  8. உப்பு- தேவையான அளவு
  9. பெருங் காயத்தூள்- ஒரு சிட்டிகை
  10. நல்லெண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  11. கடுகு- 1/4 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு பற்கள், காய்ந்த மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. புளியை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிகரைசலை எடுத்துக் கொள்ளவும்.
  3. கத்தரிக்காயை நன்றாக கழுவி விட்டு அதன் மேல் எண்ணெய் தேய்த்து மிதமான சூட்டில் கத்திரிக்காயின் தோல் கருமை நிறம் ஆகும் வரை வாட்டி எடுக்கவும்.
  4. கத்தரிக்காய் நன்கு சுட்ட பின், தண்ணீரில் கழுவி, அதன் தோலை நீக்கி விட்டு நன்கு மசித்து கொள்ளவும்.
  5. மசித்த கத்தரிக்காயுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, காய்ந்த மிளகாய், கருலேப்பில்லை, உப்பு, புளி கரைசல், பெருங் காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  6. எண்ணெய்யில் கடுகைப் பொடித்து கத்தரிக்காய் கலவையில் சேர்க்கவும்.
  7. சூடான சாதம், சப்பாத்தியுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்