வீடு / சமையல் குறிப்பு / தக்காளி கார சட்னி

Photo of Tomato kara chutney by Rabia Alaudeen at BetterButter
281
1
0.0(0)
0

தக்காளி கார சட்னி

Jun-30-2018
Rabia Alaudeen
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி கார சட்னி செய்முறை பற்றி

காலை உணவிற்கு ஏற்ற சட்னி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தக்காளி 4
  2. காய்ந்த மிளகாய் 15
  3. கருவேப்பிலை ஒரு கையளவு
  4. உப்பு
  5. சின்ன வெங்காயம் 6
  6. பூண்டு 3 பல்
  7. நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி
  8. கடுகு தாளிக்க

வழிமுறைகள்

  1. பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் இரண்டையும் நன்றாக தோல் நீக்கவும்.
  2. தக்காளி, பூண்டு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்றாக தண்ணீரில் அலசவும்.
  3. ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி, கருவேப்பிலை, சின்னவெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு தேவையான அளவு உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் கருவேப்பிலை தாளித்து அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பை சிறுதீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
  5. சட்னி நன்றாக பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைக்கவும்.
  6. எண்ணெய் நன்றாக பிரிந்து வரும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும்.
  7. தக்காளி கார சட்னி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்