வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சட்னி ஓட்டல் ஸ்டைல்

Photo of Hotel style coconut chutney by Rabia Alaudeen at BetterButter
1303
1
0.0(0)
0

தேங்காய் சட்னி ஓட்டல் ஸ்டைல்

Jun-30-2018
Rabia Alaudeen
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சட்னி ஓட்டல் ஸ்டைல் செய்முறை பற்றி

ஹோட்டலில் கிடைக்கும் இந்த தேங்காய் சட்னிக்காகவே பலரும் ஹோட்டலை நாடுகின்றனர். இனி சுலபகமாக வீட்டிலேயே தேங்காய் சிட்னியை செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பெரிய தேங்காய் 1/2 முடி
  2. பச்சை மிளகாய் 3
  3. பூண்டு 3 பல்
  4. உப்பு சுவைக்கேற்ப
  5. தாளிக்க :
  6. எண்ணெய் 1 தேக்கரண்டி
  7. கடுகு உளுந்தம் பருப்பு 1/2 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. நல்ல பருப்பான தேங்காயாக இருக்க வேண்டும்.
  2. அரை முடி தேங்காயை நன்கு துருவவும்.
  3. சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், உரித்த பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  4. சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சிட்னியில் கலந்து பரிமாறவும்.
  5. சுவையான தேங்காய் சட்னி தயார். தோசை இட்லி சப்பாத்தி போன்ற உணவுகளுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்