வீடு / சமையல் குறிப்பு / க்ரீன் புலாவ்

Photo of Green pulao by shyamala devi at BetterButter
558
2
0.0(0)
0

க்ரீன் புலாவ்

Jun-30-2018
shyamala devi
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

க்ரீன் புலாவ் செய்முறை பற்றி

க்ரீன் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • கர்நாடகா
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாசுமதி அரிசி 400 கிராம்
  2. வெங்காயம் 3 பெரியது
  3. தக்காளி 2
  4. கேரட்,பீன்ஸ்,உருளை கிழங்கு சேர்த்து 100 கிராம்
  5. புதினா 2 கையளவு
  6. கொத்தமல்லி 1 கையளவு
  7. பச்மிளகாய் 5
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
  9. பட்டை ,கிராம்பு,சோம்பு தாளிக்க
  10. நெய் தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. உப்பு ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. பாசுமதி அரிசியை 1/2 மணி நேரம் கழுவிஊற வைக்க வேண்டும்.வெங்காயம்,தக்காளியை நறுக்கி கொள்ள வேண்டும்.பச்சை மிளகாய்,கொத்தமல்லி,புதினா வை பேஸ்டாக தண்ணீர் விட்டு அரைக்கவும்
  2. அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு நெய்,எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ,பட்டை,கிராம்பு ,சோம்பு தாளிக்க வேண்டும்.
  3. வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.பின் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.பின் அரைத்து வைத்து ள்ள புதினா,கொத்த மல்லி,பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.காய்கறிகளை சேர்த்து வதக்கிய பின் 800 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  5. உப்பு சேர்த்து ஒரு கொதி, வந்தவுடன் ,அரிசி சேர்க்க வேண்டும்
  6. பின் அரிசி அரைப்பதம் வெந்தவுடன் ,தட்டை போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.10 நிமிடம் கழித்து தட்டினை எடுத்து பார்த்தால் அரிசி உதிரியாக வெந்திருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்