வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி வட்டலப்பம்

Photo of Jaggery Egg Pudding by Najeeba Refaye at BetterButter
593
2
0.0(0)
0

கருப்பட்டி வட்டலப்பம்

Jun-30-2018
Najeeba Refaye
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி வட்டலப்பம் செய்முறை பற்றி

*செய்முறை*:- முட்டையை நன்கு மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். தேங்காய்ப்பாலில் கருப்பட்டி யை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பு, பாதம் ஆகியவற்றை தேவைப்பட்டப்படி நறுக்கிக் கொள்ளவும். கலக்கி வைத்துள்ள முட்டை, கலக்கி வைத்துள்ள தேங்காய்ப்பால் கருப்பட்டி, ஏலப்பொடி, கன்டன்ஸ் மில்க் இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நன்கு அடித்து விட்டு, வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள முந்திரிப் பருப்பு, பாதம் இவற்றை மேலே தூவி, அலுமினிய தாள் போட்டு மூடி, பின் அதன் மேல் மூடி போட்டு மூடிய பிறகு, பிரஷர் குக்கரில் தண்ணீர் விட்டு ஸடாண்டு போட்டு, அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து பிரஷர் குக்கரை மூடி விட்டு, இரண்டு விசில் சப்தம் வந்த பிறகு, 30 நிமிடங்கள் தீயைக் குறைத்து வேக வைத்து 10 நிமிடம் கழித்து எடுத் தால்,... சுவையான கருப்பட்டியில் செய்த வட்டலப்பம் ரெடி.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஈத்
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கருப்பட்டி 300 கிராம்
  2. கெட்டியான தேங்காய் முதல் பால் மி. 300
  3. முட்டை 6
  4. கன்டன்ஸ் மில்க் 3 டீஸ்பூன்
  5. ஏலப்பொடி தே. அளவு
  6. பாதம்+முந்திரிப் பருப்பு+ உலர் திராட்சை தே. அளவு

வழிமுறைகள்

  1. செய்முறை:- முட்டையை நன்கு மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். தேங்காய்ப்பாலில் கருப்பட்டி யை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பு, பாதம் ஆகியவற்றை தேவைப்பட்டப்படி நறுக்கிக் கொள்ளவும். கலக்கி வைத்துள்ள முட்டை, கலக்கி வைத்துள்ள தேங்காய்ப்பால் கருப்பட்டி, ஏலப்பொடி, கன்டன்ஸ் மில்க் இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நன்கு அடித்து விட்டு, வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
  2. பின்னர் நறுக்கி வைத்துள்ள முந்திரிப் பருப்பு, பாதம் இவற்றை மேலே தூவி, அலுமினிய தாள் போட்டு மூடி, பின் அதன் மேல் மூடி போட்டு மூடிய பிறகு, பிரஷர் குக்கரில் தண்ணீர் விட்டு ஸடாண்டு போட்டு, அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து பிரஷர் குக்கரை மூடி விட்டு, இரண்டு விசில் சப்தம் வந்த பிறகு, 30 நிமிடங்கள் தீயைக் குறைத்து வேக வைத்து 10 நிமிடம் கழித்து எடுத்தால்... சுவையான கருப்பட்டியில் செய்த வட்டலப்பம் ரெடி.
  3. குறிப்பு :- இதை தேவையான வடிவில் வெட்டி பரிமாறவும். தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் சுத்தமான நெய் ஊற்றிக்கொள்ளவும் முட்டை, பால், கருப்பட்டி இவைகளை நன்கு நுரை வரும் வரை அடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்