வீடு / சமையல் குறிப்பு / சிவப்பரிசி கருப்புளுந்து தோசை

Photo of Redrice Blackurad dal Dosa by Sowmya Sundar at BetterButter
533
2
4.0(0)
0

சிவப்பரிசி கருப்புளுந்து தோசை

Jul-01-2018
Sowmya Sundar
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிவப்பரிசி கருப்புளுந்து தோசை செய்முறை பற்றி

சிவப்பு அரிசி மற்றும் கருப்பு உளுந்து சேர்த்து செய்த ஆரோக்கியமான தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிவப்பு அரிசி-2 கப்
  2. இட்லி அரிசி-1 கப்
  3. கருப்பு உளுந்து-1 கப்
  4. வெந்தயம்-1 டீஸ்பூன்
  5. உப்பு -தேவையான அளவு
  6. நல்லெண்ணெய் - தோசை வார்க்க

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து களைந்து விட்டு தண்ணீர் விட்டு ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் தண்ணீர் வடித்து தனியாக எடுத்து கொண்டு மிக்சி அல்லது கிரைண்டரில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் வெளியே வைத்து புளித்து பொங்க விடவும்
  4. தோசை கல் காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை தோசையாக வார்த்து நல்லெண்ணெய் சுற்றிலும் விட்டு இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்
  5. சூடாக சாம்பார் சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்