வீடு / சமையல் குறிப்பு / அவல் சப்பாத்தி

Photo of Poha chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
482
2
0.0(0)
0

அவல் சப்பாத்தி

Jul-01-2018
Krishnasamy Vidya Valli
130 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவல் சப்பாத்தி செய்முறை பற்றி

எப்பொழுதும் அவலை வைத்து உப்புமா தான் செய்ய வேண்டுமா? சப்பாத்தி முயற்சி செய்யலாமே! ஒருவருக்கு மூன்று வீதம் மூன்று நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிவப்பு கெட்டி அவல் அரை கப்
  2. மாப்பிள்ளை சம்பா அரிசி கால் கப்
  3. கோதுமை மாவு கால் கப்
  4. உப்பு முக்கால் தேக்கரண்டி
  5. காரப்பொடி அரை தேக்கரண்டி
  6. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  7. கரம் மசாலா அரை தேக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  9. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. சம்பா அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. கெட்டி அவலாக இருப்பதால் தண்ணீர் விட்டு களைந்து சிறிது தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  3. தண்ணீரை வடித்து விட்டு இரண்டையும் உப்பு பெருங்காயம் காரப்பொடி கரம் மசாலா சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த விழுதுடன் கோதுமை மாவு கொத்தமல்லி இலை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  5. தண்ணீர் சேர்க்காமல் பிசையவும்
  6. வாழை இலை/பட்டர் பேப்பர் அல்லது பாலித்தீன் கவரில் எண்ணெய் தடவி சப்பாத்தியாக தட்டிக் கொண்டு அதை தோசைக் கல்லில் போட்டு நெய்/எண்ணெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  7. தயிர் சாலட் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்