BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / அவல் ஊசி கோதுமை ரவை கொழுக்கட்டை

Photo of Poha longwheat rava kozhukattai by Krishnasamy Vidya Valli at BetterButter
119
2
0(0)
0

அவல் ஊசி கோதுமை ரவை கொழுக்கட்டை

Jul-01-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அவல் ஊசி கோதுமை ரவை கொழுக்கட்டை செய்முறை பற்றி

அளவான இனிப்பு சேர்த்த ஆரோக்கியமான கொழுக்கட்டை இது. ஒருவருக்கு மூன்று விதம் ஆறு நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • కలయిక
  • ఆవిరికి
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிவப்பு கெட்டி அவல் அரை கப்
  2. ஊசி கோதுமை ரவை கால் கப்
  3. அரிசி மாவு 2 தேக்கரண்டி
  4. வெல்லம் 1/4 கப் + 1/8 கப்
  5. ஏலப் பொடி 2 சிட்டிகை
  6. தேங்காய்த்துருவல் 2 மேசைக்கரண்டி
  7. நெய் ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அவல் மற்றும் ஊசி கோதுமை ரவையை அரைமணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும்
  2. இரண்டையும் தண்ணீர் வடித்து விட்டு அரிசி மாவு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் 1/8 கப் தண்ணீர் விட்டு வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்
  4. விருப்பப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்
  5. பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்த விழுது தேங்காய் துருவல் நெய் ஏலப்பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  6. ஆறவைத்து கொழுக்கட்டை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  7. ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்