வீடு / சமையல் குறிப்பு / அகர் செர்ரி பால் மினி பணகோட்டா

Photo of Agar cherry mini milk panacotta by Nancy Samson at BetterButter
521
1
0.0(0)
0

அகர் செர்ரி பால் மினி பணகோட்டா

Jul-01-2018
Nancy Samson
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அகர் செர்ரி பால் மினி பணகோட்டா செய்முறை பற்றி

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண்கவர் மற்றும் சுவையான ஒரு டெசேர்ட் வகையை சேர்ந்தது. பால் சாப்பிட மறுக்கும் குழந்தையும் கேட்டு வாங்கி சாப்பிடும் ஒரு அருமையான பதார்த்தம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அகர் அகர் எனப்படும் சீனா க்ராஸ் - 1/4 பாக்கெட்
  2. செர்ரி பழங்கள் - 1கப்
  3. பால் - 2 கப்
  4. சர்க்கரை - 1/4 கப் (உங்கள் சுவைக்கு ஏற்றார் போல அளவில் மாற்றம்செய்துகொள்ளுங்கள்)
  5. ரோஸ் எஸ்ஸென்ஸ் - 3 சொட்டுகள்

வழிமுறைகள்

  1. செர்ரி பழங்களை கோட்டை நீக்கி, தேன் அல்லது சற்கரைப்பாகில் முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும்.
  2. இது உங்கள் விருப்பம், நான் முதல் நாள் இரவு ஊறவைத்து செய்வது வழக்கம். நீங்கள் fresh fruit ஆக சேர்க்க விரும்பினால், முதல் step-ஐ விட்டுவிடவும்.
  3. இப்போது பாலை காய்ச்சவும், பால் நன்கு காய்ததும், தேவையான சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை தீயை குறைத்து வைக்கவும்.
  4. சர்க்கரை கரைந்ததும், அகர் அகர் எனப்படும் சீனா க்ராஸ்-ஐ பொடியாக நறுக்கி பாலுடன் சேர்க்கவும்.
  5. மிதமான தீயில் வைத்து, அகர் கரையும் வரை அவ்வப்போது கலந்து கொடுக்கவும்.
  6. அகர் முற்றிலும் கரைந்ததும், பாலும் அளவும் சுண்டியிருக்கும்.
  7. ஒரு கரண்டியில் பாலை எடுத்து , ஒரு குளிர்ந்த தட்டில் ஓரிரு சொட்டுகள் விடவும். சற்று நேரம் விட்டு அதனை விரலால் தொட்டு பார்க்கும் போது அது ஜெல்லி போல உறைந்து இருக்கவேண்டும்.
  8. இதுவே சரியான பதம். தீயை அனைத்து, ஒரு கம்பி வடிகட்டியில் வடிகட்டிக்கொள்ளலாம்.
  9. ஒரு ஐஸ் கட்டி tray-இல் , செர்ரியை நான்காக வெட்டி , tray -இல் படத்தில் உள்ளபடி செட் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
  10. பால் வடிகட்டியதும், தயாராக வைத்துள்ள ஐஸ் tray-இல் ஊற்றி, ஒரு தட்டில் நீர் ஊற்றி அதில் tray-ஐ வைத்து விடவும்.
  11. சூடு ஆறியதும், பிரிட்ஜ் இல் அரைமணிநேரம் வைத்து எடுக்கவும்.
  12. இதனை ஒரு ஸ்பூன் வைத்து கவனமாக எடுத்து (demould) பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்