வீடு / சமையல் குறிப்பு / Athiradi Rasam

Photo of Athiradi Rasam by Asiya Omar at BetterButter
0
0
0(0)
0

Athiradi Rasam

Jul-02-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. ரசப்பொடிக்கு தே.பொ:-
  2. மிளகு - 3 தேக்கரண்டி
  3. சீரகம்- 2 தேக்கரண்டி
  4. மிளகாய்வற்றல் - 4-6
  5. வெந்தயம் -1/2 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
  7. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  8. புளி -எலுமிச்சை அளவு
  9. உப்பு - தேவைக்கு.
  10. ரசப்பொடி பொடித்து தேவைக்கு அவரவர் சுவைக்கு தக்க பயன்படுத்தவும்
  11. ரசப்பொடியுடன் தட்டி அல்லது சுற்றி எடுக்க:-
  12. பூண்டு 6 பற்கள்
  13. தக்காளி -1
  14. மல்லி,கருவேப்பிலை - சிறிது
  15. தாளிக்க:-
  16. எண்ணெய் அல்லது நெய் -3 தேக்கரண்டி
  17. கடுகு -1 தேக்கரண்டி
  18. கருவேப்பிலை -1 இணுக்கு.

வழிமுறைகள்

  1. மிளகு,சீரகம்,மிளகாய் வற்றல்,வெந்தயம் பக்குவமாக சிறிது எண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும்.
  2. ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் ,கால் தேக்கரண்டி பெருங்காயப்பொடி சேர்த்து பொடிக்கவும்.
  3. இத்துடன் தக்காளி,பூண்டு,மல்லி,கருவேப்பிலை சேர்த்து சுற்றி எடுக்கவும். புளியை ஊற விட்டு ,தேவைக்கு உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
  4. ரசத்திற்கு தாளிக்க விழுது தயார்
  5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கவும்,கடுகு போட்டு வெடிக்கவும்,கருவேப்பிலை ஒரு இணுக்கு சேர்த்து வெடிக்க விடவும். அரைத்த விழுதை சேர்த்து நன்கு பிரட்டவும்.
  6. கரைத்த புளிக்கரைசலை விடவும்.உப்பு சரிபார்க்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  7. ரசம் நுரை கூடி வரும்பொழுது அடுப்பை அணைக்கவும். சுவையான அதிரடி ரசம் தயார்.
  8. சூடான சாதம் பக்க உணவுடன் இந்த ரசம் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்