வீடு / சமையல் குறிப்பு / ஐஸ்க்ரீம் கேக்(பிஸ்தா, சாக்லேட், ஸ்ட்ராபெரி)

Photo of ICE cream  cake (pista, chocolate,strawberry) by Waheetha Azarudeen at BetterButter
533
6
0.0(0)
0

ஐஸ்க்ரீம் கேக்(பிஸ்தா, சாக்லேட், ஸ்ட்ராபெரி)

Jul-02-2018
Waheetha Azarudeen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஐஸ்க்ரீம் கேக்(பிஸ்தா, சாக்லேட், ஸ்ட்ராபெரி) செய்முறை பற்றி

பிஸ்தா சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் கலந்த பவுண்ட் கேக் .

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • அமெரிக்கன்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா 1 கப்
  2. பேக்கிங் சோடா கால் ஸ்பூன்
  3. பேக்கிங் பவுடர் அரை ஸ்பூன்
  4. சர்க்கரை அரை கப்
  5. பிஸ்தா ஐஸ்கிரீம் 50ml
  6. சாக்லேட் ஐஸ்கிரீம் 50ml
  7. ஸ்ட்ராபெரி ஐஸ் கிரீம் 50ml
  8. பிஸ்தா எஸ்ஸென்ஸ் 1/4 ஸ்பூன்
  9. ஸ்ட்ராபெரி எஸ்ஸென்ஸ் 1/4 ஸ்பூன்
  10. கொக்கோ பவுடர் 1 ஸ்பூன்
  11. முட்டை பெரியது 4
  12. எண்ணெய் கால் கப்
  13. வெண்ணிலா எசன்ஸ் 1 ஸ்பூன்
  14. முழு கொழுப்பு பால் 1/4 கப்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி எலக்ட்ரிக் பீட்டர் யில் நன்கு அடித்துக் கொள்ளவும்
  2. பின்பு அதில் அரை கப் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  3. பின்பு அதில் வென்னிலா எசன்ஸ் மற்றும் கால் கப் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  4. பின்பு அதில் மைதா மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா இவை மூன்றும் சலித்து போடவும்
  5. பின்பு அதில் கால் கப் குளிர்ந்த பாலை ஊற்றி மெல்ல மெல்ல கலக்கவும்
  6. பின்பு கலந்த கேக் மாவை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும்
  7. முதல் பகுதியில் பிஸ்தா ஐஸ்கிரீம் மற்றும் பிஸ்தா எஸன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  8. இரண்டாவது பகுதியில் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  9. மூன்றாவது பகுதியில் சாக் லேட் ஐஸ் கிரீம் மற்றும் சாக்லேட் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  10. பிரெட் ட்ரேயில் வெண்ணெய் தடவி வைக்கவும்
  11. பின்பு முதலில் சாக்லேட் மாவை ஊற்றவும்
  12. பின்பு சாக்லேட் மாவின் நடுப்பகுதியில் ஸ்ட்ராபெர்ரி மாவை ஊற்றவும்
  13. பின்பு ஸ்ட்ராபெரி மாவின் நடு பகுதியில் பிஸ்தா மாவை ஊற்றவும்
  14. பிறகு அவனை 140 டிகிரியில் ப்ரீஹீட் செய்யவும்
  15. பிறகு 50 நிமிடம் பேக் செய்து எடுத்தால் சுவையான ஐஸ்க்ரீம் கேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்