வீடு / சமையல் குறிப்பு / பிரண்டைத் துவையல்

Photo of Adamant creeper chutney by Asiya Omar at BetterButter
389
0
0.0(0)
0

பிரண்டைத் துவையல்

Jul-02-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரண்டைத் துவையல் செய்முறை பற்றி

பிரண்டை மருத்துவ குணமிக்க ஒரு தாவரம்,மூட்டு வலிக்கு சிறந்த மருந்து.இதில் துவையல் செய்து சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நறுக்கிய இளம் பிரண்டை - 1 கப்
  2. எண்ணெய் -1-2 தேக்கரண்டி
  3. உளுத்தம் பருப்பு -1 மேஜைக்கரண்டி
  4. மிளகாய் வற்றல்-2 -3
  5. பூண்டு -2 பற்கள்
  6. புளி - சிறிது
  7. உப்பு - சுவைக்கு.

வழிமுறைகள்

  1. பிரண்டையில் இளசாக பார்த்து நறுக்கி எடுக்கவும். நாற்பக்கமும் விளிம்பை கத்தியால் செதுக்கி கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பை வறுத்து எடுக்கவும்.
  3. அடுத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பிரண்டையை நந்கு வதக்கி எடுக்கவும்.
  4. அத்துடன் வற்றல்,பூண்டு சேர்த்து வதக்கவும்.உப்பு புளி சேர்க்கவும்.ஆற வைக்கவும்,முதலில் வறுத்த உளுத்தம் பருப்பும் சேர்க்கவும்.
  5. சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
  6. சுவையான சத்தான ஆரோக்கியமான பிரண்டைத்துவையல் தயார்.
  7. வெரட்டி ரைஸ்கு பொருத்தமாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்