வீடு / சமையல் குறிப்பு / அவல் அப்பம்

Photo of Poha appam by Krishnasamy Vidya Valli at BetterButter
763
1
0.0(0)
0

அவல் அப்பம்

Jul-02-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவல் அப்பம் செய்முறை பற்றி

பண்டிகை காலங்களுக்கு எளிதில் செய்யும் இனிப்பு வெரைட்டி இது. ஒருவருக்கு நான்கு வீதம் நான்கு நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிவப்பு கெட்டி அவல் அரை கப்
  2. கோதுமை மாவு ஒரு மேசைக்கரண்டி
  3. அரிசி மாவு ஒரு மேசைக்கரண்டி
  4. நன்றாக பழுத்த பழம் 1
  5. வெல்லம்/நாட்டு சர்க்கரை/கருப்பட்டி -1/4 கப்+1/8 கப்
  6. ஏலப்பொடி 4 சிட்டிகை
  7. தேங்காய் துருவல் ஒரு மேசைக்கரண்டி
  8. நெய் ஒரு தேக்கரண்டி
  9. எள்ளு ஒரு தேக்கரண்டி
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. அவலை களைந்து தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  2. வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வடிகட்டி கொள்ளவும்
  3. வெல்ல கரைசல் ஊறவைத்த அவல் மற்றும் கொடுக்கப்பட்ட எல்லா பொருட்களும் (எண்ணெய் தவிர) சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  4. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு காய்ந்ததும் மாவை உருட்டி போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
  6. சுவையான மிருதுவான அப்பம் தயார். சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்