வீடு / சமையல் குறிப்பு / தர்பூசணி போன்ற கடல்பாசி புட்டிங்

Photo of Watermelon agar agar by Rabia Hamnah at BetterButter
483
3
0.0(0)
0

தர்பூசணி போன்ற கடல்பாசி புட்டிங்

Jul-02-2018
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தர்பூசணி போன்ற கடல்பாசி புட்டிங் செய்முறை பற்றி

மாலை நேரத்தில் பள்ளிகளில் இருந்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடல்பாசி- 15 கிராம்
  2. பால் -600ml
  3. சர்க்கரை -தேவையான அளவு
  4. மில்க்மெய்ட்- 3 டேபிள் ஸ்பூன்
  5. தண்ணீர் -3 கப்
  6. எள் அலங்கரிக்க
  7. ஸ்ட்ராபெர்ரி எஸன்ஸ் -இரண்டு சொட்டு
  8. பிஸ்தா எஸன்ஸ் -இரண்டு சொட்டு
  9. வெனிலா எசன்ஸ் -2 சொட்டு

வழிமுறைகள்

  1. முதலில் கடல்பாசியை மூன்று பங்காக பிரிக்கவும்
  2. மூன்றிலும் ஒவ்வொரு டம்ளர் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்
  3. ஒரு பங்கை அடுப்பில் வைத்து காய்ச்சவும்
  4. கடல் பாசி நன்கு கரைந்ததும் பால் 200ml சேர்த்து நன்றாக காய்ச்சவும்
  5. தேவைக்கு சீனி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் மெய்டு சேர்க்கவும்
  6. பின்பு இரண்டு சொட்டு ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு பவுலில் ஊற்றி 5 நிமிடம் ஆற வைத்து பின் ஃப்ரிட்ஜில் வைக்கவும்
  7. மற்றொரு பங்கு கடல்பாசியை இப்பொழுது அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சவும்
  8. கடல் பாசி நன்கு கரைந்ததும் பால் சேர்த்து காய்ச்சவும்
  9. தேவைக்கு சர்க்கரை மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் மெய்ட் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு சொட்டு வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி இறக்கவும்
  10. பின்பு பிரிட்ஜில் உள்ள சிவப்பு நிறமுள்ள கடல்பாசியை எடுத்து அதன் மேலே வெள்ளை நிற கடல்பாசியை ஊற்றவும்
  11. மீண்டும் பிரிட்ஜில் வைத்து விடவும்
  12. இறுதியாக மற்றொரு ஊறவைத்த கடல்பாசியை அடுப்பில் வைத்து காய்ச்சவும்
  13. கடல் பாசி நன்கு கரைந்ததும் பால் சேர்த்து காய்ச்சவும்
  14. தேவைக்கு சீனி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் மெய்ட் சேர்த்து காய்ச்சவும்
  15. பின்பு இரண்டு சொட்டு பிஸ்தா எசன்ஸ் சேர்க்கவும் இது பச்சை நிறமுள்ள பிஸ்தா எஸன்ஸ்
  16. மீண்டும் பிரிட்ஜில் உள்ள பொருளை எடுத்து அதன் மேலே பச்சை நிற கடல்பாசியை ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும்
  17. நான்கு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்
  18. பின்பு பரிமாறும் பொழுது கரைகளில் கத்தியை வைத்து லைட்டாக நீக்கிவிட்டு ஒரு தட்டில் கவிழ்த்து எடுக்கவும்
  19. வாட்டர் மெலன் போன்ற கடற்பாசி தயார்
  20. வாட்டர் மேனன் விதைகளை போன்று தோற்றமளித்த மேலே எள்ளை தூவவும்
  21. விரும்பிய வடிவில் வெட்டிப் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்