வீடு / சமையல் குறிப்பு / ஸ்டஃப்டு கிரீன் பராத்தா

Photo of Stuffed Green Paratha by Sowmya Sundar at BetterButter
182
2
0.0(0)
0

ஸ்டஃப்டு கிரீன் பராத்தா

Jul-02-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்டஃப்டு கிரீன் பராத்தா செய்முறை பற்றி

பச்சை பட்டாணி பராத்தாவில் பன்னீர் ஸ்டஃப்பிங் செய்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பராத்தா செய்ய-
  2. பச்சை பட்டாணி-1 1/2 கப்
  3. கோதுமை மாவு-2 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. பச்சை மிளகாய்-2
  6. நெய்/எண்ணெய்-பராத்தா செய்ய தேவையான அளவு
  7. ஸ்டஃப்பிங் செய்ய-
  8. துருவிய பன்னீர்-1கப்
  9. பொடியாக நறுக்கிய வெங்காயம்-1
  10. மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்
  11. ஆம்சூர் பொடி -1/2 டீஸ்பூன்
  12. கொத்தமல்லி தழை -சிறிது
  13. உப்பு தேவையான அளவு
  14. கரம் மசாலா தூள்-1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பச்சை பட்டாணியை தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.
  2. பின்னர் தண்ணீர் வடிகட்டி விட்டு பட்டாணி, பச்சை மிளகாயை சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  3. அரைத்த விழுதுடன் கோதுமை மாவு ,உப்பு ,ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் விட தேவை இல்லை.
  4. இப்போது ஸ்டஃப்பிங் செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. மாவை பிரித்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அதே போல் ஸ்டஃப்பிங்கையும் அதே அளவு உருண்டைகளாக பிரித்து கொள்ளவும்
  6. மாவை சப்பாத்தியாக திரட்டி அதன் நடுவில் ஒரு ஸ்டஃப்பிங்கை வைத்து மூடவும் .பின் மறுபடியும் சிறிது கனமாக தேய்த்து கொள்ளவும் .
  7. இதே போல அனைத்தையும் செய்து கொள்ளவும்
  8. தவா காய்ந்ததும் பராத்தாக்களை சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்