வீடு / சமையல் குறிப்பு / ராஜ்மா பீட் கட்லெட்

Photo of Rajma Beet Cutlet by Sowmya Sundar at BetterButter
111
1
0.0(0)
0

ராஜ்மா பீட் கட்லெட்

Jul-02-2018
Sowmya Sundar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா பீட் கட்லெட் செய்முறை பற்றி

ராஜ்மா, உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் சேர்த்து செய்த ஆரோக்கியமான கட்லெட்.செயற்கை நிறம் சேர்க்காமல் செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஷாலோ ஃபிரை
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராஜ்மா ஒரு கப்
  2. உருளைக்கிழங்கு ஒன்று
  3. பீட்ரூட் துருவல் கால் கப்
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று
  5. மிளகாய் பொடி ஒரு ஸ்பூன்
  6. சீரகப் பொடி அரை ஸ்பூன்
  7. ஆம்சூர் பவுடர் அரை ஸ்பூன்
  8. கரம் மசாலா பொடி அரை ஸ்பூன்
  9. எலுமிச்சைச் சாறு ஒரு ஸ்பூன்
  10. கொத்தமல்லி தழை சிறிது
  11. உப்பு தேவையான அளவு
  12. பிரட் க்ரம்ஸ் -1/4 கப்
  13. எண்ணெய்-ஷாலோ ஃப்ரை செய்ய

வழிமுறைகள்

  1. ராஜ்மாவை தண்ணீர் விட்டு பத்து மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் நன்றாக வேக வைத்து வடித்து கொள்ளவும். உருளைக்கிழங்கையும் வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்
  2. பாத்திரத்தில் எண்ணெய்,பிரட் க்ரம்ஸ் தவிர கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக மசித்து கலந்து கொள்ளவும்
  3. பின்னர் அதை பாகங்களாக பிரித்து விரும்பிய கட்லெட் வடிவில் செய்து கொள்ளவும்
  4. பானில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒவ்வொரு கட்லெட்டாக ப்ரட் க்ரம்ஸ்ஸில் பிரட்டி எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து பொன்னிறமாக ஷாலோ ஃப்ரை செய்து எடுக்கவும்
  5. தக்காளி சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்