வீடு / சமையல் குறிப்பு / பால் சூறா மீன் குழம்பு (காரைக்குடி ஸ்டைல்)

Photo of Shark fish curry (karaikudi style) by Adaikkammai Annamalai at BetterButter
546
3
0.0(0)
0

பால் சூறா மீன் குழம்பு (காரைக்குடி ஸ்டைல்)

Jul-02-2018
Adaikkammai Annamalai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பால் சூறா மீன் குழம்பு (காரைக்குடி ஸ்டைல்) செய்முறை பற்றி

தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. . தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மாவுசத்துள்ள உணவுப்பொருட்களை சாப்பிடவேண்டும். கடலில் கிடைக்கும் பால்சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு, குழம்பு செய்து சாப்பிட்டால் பால் சுரப்பு அதிகமாகும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் சுறா - 250 கிராம்
  2. தேங்காய் - அரை மூடி (துருவியது)
  3. புளி - ஒரு சிறிய உருண்டை
  4. பூண்டு - 4 பல்
  5. சீரகம் - 2 டீஸ்பூன்
  6. மிளகு - 1 டீஸ்பூன்
  7. மல்லி - 2 டீஸ்பூன்
  8. சுக்கு - ஒரு சிறிய துண்டு (அம்மியில் வைத்து தட்டவும்)
  9. கடுகு - 1 டீஸ்பூன்
  10. வெந்தயம் - 1 டீஸ்பூன்
  11. வெங்காயம் - 2
  12. தக்காளி - 2
  13. தேங்காய் பால் - 1/2 கப் கெட்டியாக
  14. கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
  15. மஞ்சள்தூள் - 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. அனைத்து பொரூட்களையும் எடுத்து கொள்ளவும்,, புளியை கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும். தேங்காய் பல கெட்டியாக எடுத்து கொள்ளவும்
  2. பால் சுறாவை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக் முதல் நாள் இரவே அலசி சுத்தம் செய்து அரைத்த மிளகாய் விழுதை கொண்டு முழுவதும் பிரட்டி பிரிட்ஜில் வைக்கவும்
  3. பூண்டைத் தட்டிக்கொள்ளவும். தேங்காய்த் துருவலுடன் மிளகு, சீரகம், மல்லி, தட்டிய சுக்கு, காய்ந்த மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
  4. அடுப்பில் மண்சட்டியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
  5. தட்டிய பூண்டைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர், புளிக்கரைசல் மற்றும் தேங்காய் பால் சேர்த்து பச்சை வாடை போகும்வரை நன்கு கொதிக்கவிடவும்
  6. நன்றாக கொதித்து வந்ததும் பால் சுறாவைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். அதிகம் கிளறாமல் 5 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்