வீடு / சமையல் குறிப்பு / பச்சைப் பயிறு சீனிக்கிழங்கு கட்லெட்

Photo of Green gram sweet potato cutlet by Krishnasamy Vidya Valli at BetterButter
576
1
0.0(0)
0

பச்சைப் பயிறு சீனிக்கிழங்கு கட்லெட்

Jul-02-2018
Krishnasamy Vidya Valli
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பச்சைப் பயிறு சீனிக்கிழங்கு கட்லெட் செய்முறை பற்றி

பச்சைப்பயிறு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்யும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வெரைட்டி இது. ஒருவருக்கு இரண்டு வீதம் ஆறு நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஷாலோ ஃபிரை
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சை பயறு 1/4 கப்
  2. அரிசி மாவு -2 மேஜைக்கரண்டி
  3. சீனிக்கிழங்கு வேக வைத்து மசித்தது -1/4 கப்
  4. குடை மிளகாய் பொடியாக நறுக்கியது 1/8 கப்
  5. வெங்காயம் பொடியாக நறுக்கியது 1/8 கப்
  6. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  7. பச்சைமிளகாய் 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு தேக்கரண்டி
  9. உப்பு முக்கால் தேக்கரண்டி
  10. காரப்பொடி அரை தேக்கரண்டி
  11. கரம் மசாலா அரை தேக்கரண்டி
  12. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  13. ஆம்சூர் பவுடர் கால் தேக்கரண்டி
  14. சீரகப் பொடி கால் தேக்கரண்டி
  15. தனியா பொடி கால் தேக்கரண்டி
  16. ரவை 2 மேசைக்கரண்டி
  17. ஷாலோ பிரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பச்சைப் பயறை வெறும் கடாயில் வறுத்து 45 நிமிடங்கள் ஊற வைத்து குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
  2. அதோடு (ரவை மற்றும் எண்ணெய் தவிர) கொடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்றாக கட்லெட் மாவு செய்யும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. பிசைந்த கட்லெட்டை சிறு வடை போல் தட்டி ரவையில் பிரட்டி கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஷாலோ பிரை செய்து எடுக்கவும்
  5. சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்