வீடு / சமையல் குறிப்பு / தினை மார்பிள் டோக்ளா

Photo of Foxtail millet dhokla by Raihanathus Sahdhiyya at BetterButter
976
2
0.0(0)
0

தினை மார்பிள் டோக்ளா

Jul-02-2018
Raihanathus Sahdhiyya
72 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தினை மார்பிள் டோக்ளா செய்முறை பற்றி

டோக்ளா குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய உணவாகும். இது நம்மூர் இட்லியை போல் அவித்து செய்யப்படும் அதிக சத்து நிறைந்த உணவு. பொதுவாக இதை பருப்பு வகைகள் ஊற வைத்து அரைத்து புளிக்க வைத்து செய்வார்கள். இன்ஸ்டன்ட் ஆன செய்முறை என்றால் கடலை மாவு, தயிர் பயன்படுத்தி செய்வார்கள். அதில் சில புதுமை புகுத்தி அதிக சத்துக்கள் நிறைந்த தினை சேர்த்து மார்பிள் கேக் பாணியில் செய்துள்ளேன். சிவப்பு மற்றும் பச்சை வ‌ண்ண‌ம் கிடைக்க டோக்ளா உடன் பரிமாறப்படும் சட்னி வகைகளை மாவில் கலந்துள்ளேன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • குஜராத்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தினை : 1 கப்
  2. ரவை : 1/2 கப்
  3. கடலை மாவு : 1/4 கப்
  4. இஞ்சிபூண்டு மிளகாய் விழுது : 1 தேக்கரண்டி
  5. தயிர் : 2 மேசைக்கரண்டி
  6. உப்பு :தேவைக்கேற்ப
  7. எலுமிச்சை சாறு : 1 தேக்கரண்டி
  8. தண்ணீர் : 1 கப் (அல்லது தேவைக்கேற்ப)
  9. சிவப்பு நிற சட்னிக்கு:
  10. தக்காளி: 2 சிறியது
  11. காய்ந்த மிளகாய் : 4
  12. பூண்டு: 1 பல்
  13. பச்சை நிற சட்னிக்கு:
  14. மல்லி இலை: 1/4 கப்
  15. புதினா இலை : 1/4 கப்
  16. பூண்டு : 1 பல்
  17. பச்சை மிளகாய் : 2
  18. தாளிக்க :
  19. எண்ணெய் : 2 மேசைக்கரண்டி
  20. கடுகு : 1 தேக்கரண்டி
  21. கருவேப்பிலை : 8-10
  22. பச்சை மிளகாய் : 3

வழிமுறைகள்

  1. முதலில் தினையை தண்ணீர் ஊற்றி ஒன்றரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் (தினையை மிக்ஸியில் பவுடர் ஆக்கியும் பயன் படுத்தலாம்)
  2. தண்ணீரை வடித்து தினை மட்டும் எடுத்து மிக்சியில் போட்டு நன்றாக தோசை மாவு போல் அரைக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் கடலைமாவு எடுத்து கொள்ளவும்
  4. அதில் அரைத்து வைத்த தினை மாவையும் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கலக்கவும்
  5. பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்
  6. முதலில் பச்சை நிற சட்னி செய்வதற்கு மல்லி இலை புதினா இலை பச்சை மிளகாய் பூண்டு ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். பச்சை சட்னி தயார்.
  7. சிவப்பு நிற சட்னி செய்வதற்கு முதலில் காய்ந்த மிளகாய் கால் மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அப்பொழுதே தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு ப்ளான்ச் செய்து தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  8. பிறகு தோலுரித்து வைத்து தக்காளி, ஊற வைத்து எடுத்த காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். சிவப்பு நிற சட்னி தயார்
  9. இப்பொழுது தயாரித்து வைத்துள்ள டோக்ளா மாவை மூன்று பங்காக பிரிக்கவும்
  10. ஒரு பங்கில் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும். மீதி இரண்டு பங்குகளில் ஒரு பங்கில் சிவப்பு நிற சட்னியும் மற்றொரு பங்கில் பச்சை நிற சட்னியும் சேர்த்து நன்றாக கலக்கவும்
  11. ஒரு குக்கர் அல்லது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் ஊற்றி ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் தண்ணீரை கொதிக்க விடவும்.
  12. இறுதியாக மூன்று மாவுகளிலும் பேக்கிங் பவுடர் அரை ஸ்பூன் வீதம் சேர்த்து நன்றாக கலக்கி உடனடியாக ஒரு தட்டில் (அல்லது கேக் டின்) மூன்று மாவையும் அடுத்தடுத்து ஊற்றவும். இறுதியாக டூத் பிக் கொண்டு டிசைன் செ‌ய்யவு‌ம்
  13. அந்தத் தட்டை நீர் ஊற்றி கொதிக்கும் பாத்திரத்தில் வைத்து ஒரு மூடி போட்டு மூடி 10 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். டூத் பிக் கொண்டு நடுவில் குத்தி பார்த்து வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். முழுவதும் ஆறிய பின்னரே ஒரு தட்டில் கவிழ்த்தி துண்டுகளாக வெட்டவும்.
  14. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து அதை செய்து வைத்த டோக்ளா மீது ஊற்றி பரிமாறவும்
  15. டோக்ளாவிலே சட்னி சேர்த்துள்ளதால் த‌னியாக சட்னி பரிமாற தேவையில்லை. இந்த டோக்ளா மிகவும் சுவையுடன் இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்