வீடு / சமையல் குறிப்பு / மூவர்ண தேங்காய் அல்வா

Photo of 3 colour coconut halwa by rejina M at BetterButter
233
1
0.0(0)
0

மூவர்ண தேங்காய் அல்வா

Jul-02-2018
rejina M
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மூவர்ண தேங்காய் அல்வா செய்முறை பற்றி

சுலபமாக செய்யக்கூடிய ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேங்காய் துருவல் ஒரு கப்
  2. சர்க்கரை முக்கால் கப்
  3. நெய் தேவையான அளவு
  4. பால் தேவையான அளவு
  5. ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை
  6. கொக்கோ பவுடர் அரை டீஸ்பூன்
  7. சிகப்பு ஃபுட் கலர் சிறிதளவு
  8. பச்சை ஃபுட் கலர் சிறிதளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  2. சூடு ஆறியதும் இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
  3. ஒரு வாணலியில் முக்கால் கப் சர்க்கரை கால் கப் தண்ணீர் இரண்டையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  4. சக்கரை பாகு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்த கலவையை அதில் சேர்த்து நன்றாக கிளறவும்
  5. தண்ணீர் வற்றி கெட்டி பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும்
  6. வாணலியில் ஒட்டாமல் அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  7. இந்தக் கலவை மூன்றாக பிரித்துக் கொள்ளவும்
  8. அதில் சிகப்பு புட்கலர், பச்சை புட்கலர், கொக்கோ பவுடர் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளவும்
  9. பின்பு அதை ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் ஒன்று ஒன்றின் மேல் ஒன்றாக சேட் செய்யவும்
  10. இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் கழித்து எடுத்துப் போடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்