BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பச்சைக் கத்திரிக்காய் கொண்ட கடலை புளியிட்ட கிரேவி

Photo of Green brinjal channa tamarind gravy by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

பச்சைக் கத்திரிக்காய் கொண்ட கடலை புளியிட்ட கிரேவி

Jul-03-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சைக் கத்திரிக்காய் கொண்ட கடலை புளியிட்ட கிரேவி செய்முறை பற்றி

குலசேகரபட்டிணத்தின் பிரபலமான பச்சை கத்திரிக்காயில் செய்த ஒரு கிரேவி.இது நோ ஆனியன் நோ கார்லிக் வகையை சேர்ந்த சப்பாத்தி அல்லது பூரிக்கு தொட்டுக் கொள்ளும் சைட் டிஷ் வெரைட்டி .கொண்ட கடலை ஊறவைக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • కలయిక
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • ప్రెజర్ కుక్
  • ఉడికించాలి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சைக் கத்தரிக்காய் 6
  2. கொண்ட கடலை 3/4 கப்
  3. உப்பு ஒரு தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  5. புளி 1 நெல்லிக்காய் அளவு
  6. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  7. வறுத்து திரிக்க தேவையானவை
  8. கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
  9. உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  10. மிளகாய் வற்றல் 8
  11. கொத்த மல்லி விதை மூன்று தேக்கரண்டி
  12. எள்ளு அரை தேக்கரண்டி
  13. பட்டை ஒரு சிறிய துண்டு
  14. ஏலக்காய் கிராம்பு தலா 3
  15. தேங்காய் துருவல் ஒரு மேசைக்கரண்டி
  16. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  17. விருப்பப்பட்டால் பெருஞ்சீரகம் அரை தேக்கரண்டி
  18. கசகசா அரை தேக்கரண்டி
  19. எண்ணெய் அரை தேக்கரண்டி
  20. தாளிக்க தேவையானவை
  21. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  22. கடுகு உளுத்தம் பருப்பு தலா ஒரு தேக்கரண்டி
  23. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை 6 மணி நேரம் வரை ஊற வைத்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
  2. வறுத்து திரிக்க கொடுத்தவற்றை வறுத்து கரகரப்பாக பொடித்து கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்
  4. கொண்டக்கடலை சேர்த்து வதக்கவும்
  5. புளியை கெட்டியாக கரைத்து சேர்க்கவும்
  6. உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும்
  7. வறுத்துத் திரித்ததை சேர்த்து ஒரு கொதி விடவும்
  8. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்