வீடு / சமையல் குறிப்பு / கசப்பு இல்லாத பாகற்காய் ப்ரை

Photo of bitter gourd fry by Bhavani Murugan at BetterButter
214
0
0.0(0)
0

கசப்பு இல்லாத பாகற்காய் ப்ரை

Jul-03-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கசப்பு இல்லாத பாகற்காய் ப்ரை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் - 1
  2. பாகற்காய் - 250 கிராம்
  3. புளி - சிறிதளவு
  4. தக்காளி - 2
  5. தேங்காய் துறுவல் - 2 மேஜை கரண்டி
  6. சீரகம் - 1ஸ்பூன்
  7. பூண்டு - 4பல்
  8. மிளகாய் வத்தல் - 5
  9. கடுகு - 1தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை
  12. உப்பு
  13. எண்ணெய் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாகற்காயை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு புளி, தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. அதில் பாகற்காயை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரில் இருந்து எடுத்து கொள்ளவும்
  4. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  5. அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. பிறகு பாகற்காய், உப்பு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  7. பிறகு தக்காளி சேர்க்கவும்
  8. பிறகு தேங்காய் துறுவல், மிளகாய் வத்தல், பூண்டு சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  9. பிறகு பாகற்காய் வெந்ததும் அதனுடன் அரைத்ததை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்