வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் பக்கோடா

Photo of Cabbage pakoda by Abinaya bala at BetterButter
536
1
0.0(0)
0

முட்டைகோஸ் பக்கோடா

Jul-03-2018
Abinaya bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் பக்கோடா செய்முறை பற்றி

முட்டைக்கோஸ் வைத்து செய்யப்படும் ஒரு வகையான ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டைக்கோஸ் 200 கிராம்
  2. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  3. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  4. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  5. கடலை மாவு 2 டீஸ்பூன்
  6. அரிசி மாவு ஒரு டீஸ்பூன்
  7. வேர் கடலை பொடி ஒரு டீஸ்பூன்
  8. பெருஞ்சீரகம் ஒரு சிட்டிகை
  9. உப்பு தேவையான அளவு
  10. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முட்டைகோஸை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  2. அதனுடன் மிளகாய்த்தூள் கரம்மசாலா மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்
  3. பின் கடலை மாவு அரிசி மாவு வேர்க்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
  4. பின் ஒரு சிட்டிகை பெருஞ்சீரகம் மற்றும் உப்பு லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்
  5. பின்னர் எண்ணெயில் உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  6. மொறுமொறுப்பான முட்டைக்கோஸ் பக்கோடா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்