மீன் வறுவல் மசாலா | Fish fry masala in Tamil

எழுதியவர் Mahi Venugopal  |  24th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Fish fry masala by Mahi Venugopal at BetterButter
மீன் வறுவல் மசாலாMahi Venugopal
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

38

0

மீன் வறுவல் மசாலா recipe

மீன் வறுவல் மசாலா தேவையான பொருட்கள் ( Ingredients to make Fish fry masala in Tamil )

  • கல் பாசி - 2 துண்டுகள்
  • சோம்பு - 1 தேக்கரண்டி
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • மிளகு - 1/4 தேக்கரண்டி
  • இலவங்கப்பட்டை - 1/2 தேக்கரண்டி
  • கிராம்பு - 4 எண்ணிக்கை 's
  • முத்து வெங்காயம் - 8 எண்ணிககை 's
  • காய்ந்த சிவப்பு மிளகாய் - 4 எண்ணிக்கை 's
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • மீன் (எந்த வகையாக இருந்தாலும்) - 600 கிராம் ( நான் சீலா மீனைப் பயன்படுத்தினேன்)
  • சுவைக்கேற்ற உப்பு
  • மீனை பொரிப்பதற்கு - 200 மிலி (எண்ணெயும் மீதமுள்ள மசாலாவும்)

மீன் வறுவல் மசாலா செய்வது எப்படி | How to make Fish fry masala in Tamil

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி மசாலாக்களை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும், முதலில் கல் பாசியைச் சேர்க்கவும். அதன்பின் சோம்பு, சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி அதன்பின் முத்து வெங்காயத்தைச் சேர்க்கவும். முத்து வெங்காயம் பெரியதாக இருந்தால் நான்கு துண்டுகளாக நறுக்கி நன்றாக வதக்கிக்கொள்ளவும். அப்போதுதான் சீக்கரம் வேகும், அதன்பின் காய்ந்த சிவப்பு மிளகாயைச் சேர்க்கவும்.
  2. ஆறவைக்க எடுத்து வைத்து உப்பு சேர்க்கவும்.
  3. இப்போது உணவு பிராசசரில் மென்மையானச் சாந்தாக அரைத்து 1/4 டம்பளர் தண்ணீர் சேர்க்கவும்.
  4. இப்போது உங்கள் மீன் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மசாலாக்களுடன் மேரினேட் செய்து பிரிட்ஜில் 5 மணி நேரம் வைக்கவும்.
  5. அதன்பிறகு நீங்கள் வறுப்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் பிரிட்ஜில் இருந்து எடுக்கவும். வெங்காயத் துண்டுகளோடும் 1/4 எலுமிச்சைப் பழத்தோடு வறுத்துப் பரிமாறவும்.

எனது டிப்:

பிரிட்ஜில் வைப்பது உங்கள் விருப்பம்....

Reviews for Fish fry masala in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.