வீடு / சமையல் குறிப்பு / பாம்பே அல்வா

Photo of Bombay halwa by Maritta Felix at BetterButter
245
1
0.0(0)
0

பாம்பே அல்வா

Jul-03-2018
Maritta Felix
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பாம்பே அல்வா செய்முறை பற்றி

இது மிகவும் இலகுவான ஒரு உணவு வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • இந்திய
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சோள மாவு ஒரு கப்
  2. சர்க்கரை 2 கப்
  3. தண்ணீர் 3 கப்
  4. ஏலக்காய் ஒரு தேக்கரண்டி
  5. நெய் 10 தேக்கரண்டி
  6. பாதாம் பருப்பு 3 டேபிள்ஸ்பூன் உடைத்தது
  7. பச்சை நிற உணவு வண்ணம் இரண்டு துளிகள்

வழிமுறைகள்

  1. தண்ணீரில் சர்க்கரை போட்டு சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைக்க வேண்டும்
  2. சோள மாவை தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்
  3. சோள மாவு கலவையுடன் உணவு வண்ணத்தை சேர்க்க வேண்டும்
  4. சோள மாவு கலவை தண்ணீரில் சேர்த்து கெட்டியாகும் வரை தொடர்ந்து நன்கு கலக்க வேண்டும்
  5. கண்ணாடி பதம் வரும் வரை கலக்க வேண்டும் பிறகு அடுப்பை சிறிதாக்கி நெய் ஊற்றி திரும்பப் மீண்டும் கலக்க வேண்டும்
  6. அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதனுடன் உடைத்த பாதாம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும்
  7. ஒரு தட்டில் நெய் தடவி அல்வா சமமாக ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்
  8. பின்பு அதை விருப்பப்பட்ட வடிவில் வெட்டி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்